Friday, March 07, 2008

பார்ப்பான் திருந்தி விட்டானா?

`தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் (27.8.2007) பி. அரவிந்தகுமார் என்பவர் (casteism in new form)என்ற தலைப்பில் செய்திக் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார்.
அதில் அவர் முக்கியமாகக் குறிப்பிட்டு இருப்பதாவது:

1) ஜாதி இன்னும் புதிய வடிவத்தில் இருக்கிறது என்று பலரையும் பேட்டி கண்டு வெளியிட் டுள்ளார். சென்னை - மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு விடுவோர், குடியிருக்க வருபவர்களின் ஜாதிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். இன்னும் சில இடங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டும் வாட கைக்கு விடப்படும் என்கிற விளம்பரப் பலகைகள் தொங்குகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இடஒதுக்கீட்டினால் தான் ஜாதி வளர்கிறது, கெட்டிப்படுகிறது என்று பிரச்சாரம் செய்யும் பார்ப்பனர்கள் எந்த மனப்பாங்கில் இருக்கின்றனர் என்பதற்கு இது ஒரு கண் கண்ட எடுத்துக் காட்டாகும்.

இன்றைக்கு நேற்று அல்ல - நெடுங்காலமாகவே இந்தப் போக்கு அவர்களிடத் தில் குடி கொண்டு தானிருக்கிறது.

74 ஆண்டு களுக்கு முன் நடந்த ஒரு உரை யாடல் இப்பொ ழுது நினைவிற்கு வருகிறது.
உரையாடியவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர் - சாமான்ய மானவர்களும் கிடை யாது. காந்தியாருடன் நடைபெற்ற உரை யாடல் அது. குத் தூசி குருசாமி எஸ். இராமநாதன், கே.எம். பாலசுப்பிர மணியம், அ. பொன் னம்பலனார், ப. ஜீவானந்தம், காந்தம் சுந்தரவடிவேலு முதலி யவர்கள் அந்த உரை யாடலில் இடம் பெற்றிருந்தனர்.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த நேரம் 15 மணித்துளிகளே என்றாலும்கூட அது 35 மணித் துளிகளுக்குமேல் நீண்டது. அதில் குறிப்பிடத்தக்க வினா விடை பகுதி இதோ!

குத்தூசி குருசாமி: ஹரிஜனப் பிரச்சாரத்திற்காக வரவழைத்து தங்களைச் சூழ்ந்திருக்கும் அத் தனைப் பார்ப்பனர்களும் ஆஷாட பூதிகள் என்பதையும் புரட்டர்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்களா?

காந்தியார்: எல்லோரும் அப்படியில்லை.

குத்தூசி குருசாமி: நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பதே முக்கால் பேர் அப்படித்தான். எங்களு டன் தயவு செய்து திருவல்லிக்கேணி தெருக்களுக் கும், மயிலாப்பூர் தெருக்களுக்கும் வருவீர்களா னால் அத்தனைப் பார்ப்பனர்கள் வீட்டிலும் `பார்ப்பனர்களுக்கு மட்டிலும் வாடகைக்கு விடப்படும். கூடி டநவ கடிச க்ஷசயாஅளே என்னும் போர்டு தொங்க விட்டிருப்பதைக் காணலாம். இதே ஆசாமிகள்தான் இன்று தங்களோடு ஹரிஜனப் பிரசாரம் செய்கிறார்கள். இது எவ்வளவு அயோக்கியத்தனம் என்று பாருங்கள்.


காந்தியார்: பதட்டம் வேண்டாம். நானும் பார்ப்பனக் கொடுமைக்கு ஆளாகியதுண்டு. அறிவும், கல்வியும் இருக்கும் ஒரு கூட்டம் மற்ற கூட்டங்களின் மேல் ஆதிக்கம் செலுத்துதல் இயல்பே. (`புரட்சி இதழ் 14.1.1933).

1933-இல் மயிலாப்பூர், திருவல்லிக்கேணிகள் எப்படியிருந்தனவோ, அதே நிலைதான் இன்றைக்கும் இருக்கிறது என்பதை `இந்தியன் எக்ஸ்பிரஸில் இப் பொழுது வெளிவந்த செய்திக் கட்டுரையும் படம் பிடித்துக் காட்டுகிறது.

சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டான் என்ற டாக்டர் டி.எம். நாயரின் பொன் மொழிதான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது.

இன்றைக்கும் காஞ்சி மடத்தில் நிறுவியிருக்கும் அறக்கட்டளைகளில் ஒன்றே ஒன்று பார்ப்பனர் அல்லாதாருக்கு உண்டா?

பார்ப்பனர்களும் தமிழர்களே என்று வியாக்கி யானம் செய்யும் சில படித்த (ப)மதைத் தமிழர்களும் இன்னும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். தோழர் அரவிந்த்குமாரின் செய்திக் கட்டுரையைப் படித்த பின்னராவது புத்தியைக் கொஞ்சம் `புளி போட்டு விளக்கிக் கொள்வது நல்லது.

2) கல்விக் கூடங்களில்கூட பார்ப்பதற்கு நல்ல தோற்றமுடையவர்களுக்கே ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்க விரும்புகிறார்களாம் பல நிறுவனங்கள்கூட வேலைக்கு ஆண்களைத் தேர்வு செய்யும் போது சிவப்புத் தோல் உடையவர்களையே விரும்புகிறார்களாம்.
ஆண்டாண்டுக் காலமாக அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் பள்ளத்தில் தள்ளப்பட்ட மக்கள் (அதனால்தான் அவர்கள் பள்ளர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்) கல்விக் கண் பறிக்கப்பட்ட அந்த உரிமையற்றதுகள், சேற்றுத் தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிட்ட அந்தப் பரிதாபத்துக்குரிய மக்களிடம் தோற்றப் பொலிவு காண்பது எளிதா? வனப்புக்கும் வளர்ப்பும், சுற்றுச்சூழல் பாரம்பரியமும் தேவைப்படவில்லையா? எத்தனைத் தலைமுறைகளாக அவர்கள் ஒடுக்கப்பட் டனர்! அந்த ஒடுக்குமுறைக்குக் காரணமானவர்களே கறுப்புத் தோல் மக்களை உதாசீனப்படுத்துகிறார்கள் என்றால் திருடனே `திருடன் திருடன் என்று ஓடித் தப்பிக்க முயலும் பித்தலாட்டம் அல்லவா!

இந்தச் செய்திக் கட்டுரையைப் படிக்கும்போது தனியார்த்துறை, பொதுத் துறை, அரசுத் துறை, கூட்டுத் துறை அனைத்திலுமே இடஒதுக்கீடு கண்டிப்பாகத் தேவை என்பதை வலியுறுத்தவில்லையா?

ஒரே ஒரு பரீட்சை வைத்தாலே போதுமே - எந்தப் பார்ப்பான் தன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வைக்கிறான்? விரலை விடுங்கள் பார்க்கலாம்; இதனைச் சவால் விட்டே கேட்கிறோம். பார்ப்பான் திருந்தி விட்டானா - மனமாற்றம் அடைத்து விட்டானா? இப்பொழுது சொல்லுங்கள், பார்க்கலாம்.

------- 1-9-2007 "விடுதலை" இதழில் மின்சாரம் எழுதிய கட்டுரை

1 comment:

Unknown said...

பெரியார் - கன்னடம் பேசும் 'தமிழர்'
கருணாநிதி - தெலுங்கு 'தமிழர்'
வைகோ - தெலுங்கு பேசும் 'தமிழர்'
OBC பட்டியல்ல 10 இந்தி பேசும் 'தமிழர்' இருக்காங்க...
இப்ப சாலைப்பணிக்கு வந்திட்டாங்க இந்தி பேசும் பீஹாரிக...Madras airportல எல்லாமே இந்திக்காரங்க... நாளைக்கு OBC பட்டியல்ல சேருவாங்க இந்தி பேசும் தமிழ் தெரியாத 'தமிழர்'களா...

பார்ப்பான் தமிழ் பேசும் 'அன்னியன்'.

ஏன் இந்த வலைப்பதிவு ல இடுகை இடும் 'தமிழர்கள்'ல எத்தனை பேர் தெலுங்கு...

பாப்பான் பாப்பான் பார்ப்பான் ன்னு சொல்லுது எல்லா உண்மைய மூடி மறைக்க ...வேறன்ன?

இப்ப குஜராத்துல குஜ்ஜார்...தமிழ் நாட்டுல 3% பேர் தான் பார்ப்பனர்க...நாளைக்கு தமிழ் நாட்டுல பெரிசு இருக்க...பார்ப்பான் இல்ல....OBCக்குள்ளையே பெரிசு காத்திருக்கு...உத்தப்புரம் வெறும் உதயம்...

அப்ப உத்தப்புரத்துல நடந்துதே எப்படி...யார்யா அங்க பார்ப்பான்?

இந்திக்கார அர்ஜுன் ஸிங்குக்கு இந்தி தெலுங்கு பேசும் 'தமிழ்' அடியாட்கள் நிறைய போல....ஹீ ஹீ!!!