இவர்கள் எந்த நாட்டைப் பார்த்து எந்த மொழியில் - செக்குலர் ஸ்டேட் என்று குறிப்பிட்டார்களோ, அந்த நாடு-களில் அந்த மொழிக்கு - செக்குலர் என்-பதற்கு என்ன பொருள் இருக்கிறதோ - அவர்கள் எந்தப் பொருளில் அதைப் பயன்படுத்தியிருக்கிறார்களோ, அந்தப் பொருளில்தானே நாமும் பயன்படுத்தவேண்டும்? அதை விட்டுவிட்டு சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு, செக்குலர் என்றால் மதச் சார்பற்றது என்று பொருளல்ல; எல்லா மதங்களையும் ஒன்றுபோலக் கருதவேண்டும் என்றுதான் பொருள் என்று பார்ப்பனர்கள் கூறுகிறார்கள்.
பெண்கள் ஒரு மாநாடு நடத்துகிறார்கள். அந்த மாநாட்டில் உள்ள பெண்கள் அத்தனை பேரும், பெண்கள் பதிவிரதைகளாக நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு - பதிவிரதை என்றால் எல்லா ஆண்களையும் தங்கள் கணவனைப் போலக் கருதி நடந்து கொள்ள வேண்டும். அது தான் பதிவிரதத் தன்மை என்று அர்த்தம் சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனமானதோ, அதைவிட, அயோக்கியத்தனமாகும் - மதச் சார்பற்ற என்பதற்கு எல்லா மதங்களையும் ஒன்றுபோலக் கருத வேண்டுமென்பது! எனவே, மதச் சார்பற்ற என்றால், எந்த மதத்தையும் சாராத என்பதுதான் பொருள்.
------- புத்தகம்: மதச்சார்பின்மையும் நமது அரசும், பதிப்பு: (1968)
Sunday, March 02, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment