Friday, June 27, 2008

தி.மு.க. வன்முறைக் கட்சியா? பா.ம.க. வன்முறைக் கட்சியா?

தி.மு.க.தான் வன்முறைக் கட்சி என்று ராமதாஸ் பேசியிருக்கிறாரே?

``தி.மு.க. வன்முறைக் கட்சியா? பா.ம.க. வன்முறைக் கட்சியா? என்ற வாதத்திற்கே நான் வரவில்லை. ஆனால் மற்றொரு கட்சியை வன்முறைக்கட்சி என்று சொல்லுகின்ற தகுதி ராமதாஸுக்கு இல்லை. தமிழக அரசியலில் நேரடித் தாக்குதல் என்ற வன்முறைக் கலாசாரத்திற்கு ஆரம்ப விதையே ராமதாஸ்தான். வன்னியர் சங்கத் தலைவரான வன்னிய அடிகளாரை விழுப்புரத்தில் ஆட்களை வைத்துத் தாக்குதல் நடத்தினார். வாழப்பாடி ராமமூர்த்தியிடம் பலகோடி ரூபாய் பணத்தை வாங்கி அனுபவித்துவிட்டு, கடைசியில் சேலத்தில் அவர் எம்.பி.க்கு நின்றபோது, அவரைத் தோற்கடிக்க எல்லா வேலைகளையும் செய்து அவரையும் அவரது ஆதரவாளர்களையும் ஆட்களை வைத்துத் தாக்கினார். பா.ம.க.விலிருந்து என்னை நீக்கிவிட்டு ஆட்களை ஏவி என்மீது தாக்குதல் நடத்தினார். பண்ருட்டி ராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி என வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களையெல்லாம் தாக்குவதுதான் ராமதாஸின் நோக்கமாகவே இருந்து வந்துள்ளது. அதேபோல், ராமதாஸின் வலதுகரமாக இருக்கும் காடுவெட்டி குருவோ, `வாழப்பாடி தலையை எடுத்துவிடுவேன், தீரன்தலையைஎடுத்துவிடுவேன்' என்று பேசியிருக்கிறார். இப்போது தி.மு.க. தலைவர்களைப் பேசி வருகிறார் குரு. அதையும் ராமதாஸ்அனுமதிக்கிறார்.''

------------------29-6-2008 "குமுதம் ரிப்போர்ட்டர்" இதழில் பேராசிரியர் தீரன் அவர்களின் நேர்காணலிலிருந்து.

Monday, June 16, 2008

இராணன் பெரிய வீரன்;சீதையைக் கடத்தவில்லை; அடைக்கலம் கொடுத்தான்

இராணன் பெரிய வீரன்;

சீதையைக் கடத்தவில்லை; அடைக்கலம் கொடுத்தான்

சிறீலங்கா, வங்காளத் தொன்மை இலக்கியம் கூறுகிறதுசிறீலங்காவிலும் மற்றும் வங்காளத்தில் வழங்கப்படும் ராமாயணத்தில், இராவணனைப்பற்றி மிகவும் உயர்வாகக் கூறப்பட்டிருக்கிறது.

இராவணன் சீதையை எடுத்துச் செல்லவில்லை; அதற்கு மாறாக, ராமனும், லட்சுமணனும் சீதையைப் பெருந்தொல்லைக்கு ஆட்படுத்தினார்கள்; ஆகையால், சீதை அடைக்கலம் தேடிச் சென்றாள். அவளுக்கு இராவணன் அடைக்கலம் அளித்தான்.

இவ்வாறு, இலங்கையில் உள்ள ராமாயணம் தெரிவிப்பதாக, பிலியந்தாலா எனும் இடத்தில் உள்ள நாட்டியப் பள்ளியைச் சேர்ந்த பபாலு விஜெகுணவர்தனெ தெரிவித்தார்.
கேரளத்தில் உள்ள கதக்களி நாட்டியத்தில் இராவணன் வில்லனாகக் காட்டப்பட்டாலும், அவனுடைய உயர்ந்த குணங்களும் வெளிப்படுகின்றன; அவனுடைய அறிவுத் திறமும், வீரமும் அதில் வெளிப்படு கின்றன.

மகா ராவணா

ஆனால், சிறீலங்காவில் தொன்மைக் காலத்தில் இருந்து சொல்லப்படும் கதையில் இராவணன் உயர்ந்த குணம் உடையவனாகச் சொல்லப்படுகிறது. அரிசென் அஹுபுது மற்றும் ஜயந்த்த பதிராரச்சி ஆகிய கற்ற புலவர்களை, விஜெகுணவர்தனெ கலந்து ஆலோசித்தார். பின்பு, லங்கா அவதார சூத்ரா எனும் நூலின் அடிப்படையில் ஒரு நாட்டிய நாடகத்தை உருவாக்கினார். அதற்கு மகா ராவணா எனப் பெயர். மே 30 இல் கொழும்புவில் அரங்கம் நிரம்பி வழிய இது அரங் கேற்றப்பட்டது.

மகா ராவணா எனும் நாட்டிய நாடகத்தில் ராமனும், லட்சுமணனும் வீரர்களாகவும், நேர்மையாளர்களாகவும் தோன்றுவதில்லை. ஆனால், இராவணன் நேர்மைமிக்க வீரனாகத் திகழ்கிறான்.

மறைக்கப்படும்
உண்மைகள்


வாலியும், சுக்ரீவனும் போரிடும்பொழுது, போர் அறத்திற்கு மாறாக, ராமன் பின்புறம் இருந்து அம்பு எய்துவது காட்டப்படுகிறது.இந்தியாவில் உள்ள இராமாயணத்தில் மறைக்கப்படும் உண்மைகளை தான் உலகத்திற்கு வெளிப்படுத்தியிருப்பதாக, விஜெகுணவர்தனெ கூறினார்.

---------- நன்றி: "விடுதலை" 16-6-08

Sunday, June 15, 2008

ஸ்டாலின் பலத்தை திருநெல்வேலி மாநாட்டில் நிரூபித்தார். இப்போது உங்கள் பலத்தை காட்ட இந்த மாநாடு நடத்தப்படுகிறதா? -கனிமொழி பேட்டி


கடலூரில் தி.மு.க. மகளிரணி முதல் மாநில மாநாட்டு கொடியேற்று விழா முடிந்த தும் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

கேள்வி: இத்தனை வருடங்கள் கழித்து முதல் மகளிர் அணி மாநாடு நடத்த காரணம் என்ன?

பதில்: மகளிர் அணி சார்பில் மாநாடு நடத்த வேண்டும் என்று சில வருடங்களாகவே தலைவரிடம் கேட்டு வந்திருக்கிறோம். இப்போது தான் மாநாடு நடத்துவதற்கு அனு மதி தந்திருக்கிறார். மற்றபடி இப்போது மாநாடு நடத்து வதற்கு என்று முக்கிய காரணம் எதுவும் இல்லை.

கேள்வி: மாநாட்டின் நோக்கம் என்ன?

பதில்: பெண்கள் விழிப் புணர்வு அடைய வேண்டும், சட்டமன்றம், நாடாளுமன்றத் தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் மாநாடாக இது இருக்கும். இதனை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த மாநாடு அந்த இட ஒதுக் கீட்டை பெற்றுத் தரும் என்று நம்புகிறோம். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வும், எழுச்சியும், மகிழ்ச்சியும் இந்த மாநாடு ஏற்படுத்தும்.

கேள்வி: அ.தி.மு.க.விடம் பெண்கள் வாக்கு வங்கி உள்ளதால் உங்கள் பக்கமும் பெண்கள் வாக்கு வங்கியை இழுக்க நடக்கும் முயற்சியாக இந்த மாநாடு இருக்குமா?

பதில்: மற்ற கட்சிகளுக்கு தான் பெண்கள் ஆதரவு இருக்கிறது என்று கூறுவது ஒரு மாயை. தி.மு.க. ஆரம்பித்த காலத்தில் இருந்தே பெண்கள் ஆதரவு எங்களுக்கு இருந்து வந்திருக்கிறது. இன்னும் சொல் லப் போனால் பெண்களுக்கு அதிக உரிமைகளை பெற்றுத் தந்ததும், பெண்கள் மேம் பாட்டுக்கு பாடுபடுவது போன்ற செயல்களில் அதிக மாக ஈடுபடுவது தி.மு.க. தான். தி.மு.க.வை மேலும் அதிகமான பெண்களிடம் எடுத்துச் செல்வ தற்கும், பெண்கள் தி.மு.க.வில் அதிகமாக இணைவதற்கும் இந்த மாநாடு பெரிதும் உதவும்.

கேள்வி: உங்களாலும் ஆள் பலத்தை காட்ட முடியும் என்று காட்டுவதற்காக இந்த மாநாடா?

பதில்: அப்படி எந்த நிர்ப் பந்தமும் எங்களிடம் இல்லை. தி.மு.க.வில் ஏற்கெனவே நிறைய பெண் தலைவர்கள் இருக் கிறார்கள். எந்த குறிப்பிட்ட நபரையும் பிரபலப்படுத்த இந்த மாநாட்டை நடத்த வில்லை.

கேள்வி: உள்ளாட்சித்துறை அமைச்சர் அவரது பலத்தை திருநெல்வேலி மாநாட்டில் நிரூபித்தார். இப்போது உங்கள் பலத்தை காட்ட இந்த மாநாடு நடத்தப்படுகிறதா?


பதில்: மு.க.ஸ்டாலின் ஒரு தலைவர். நான் தலைவர் அல்ல. நெல்லை மாநாட்டுக்கும் கடலூர் மாநாட்டுக்கும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அந்த மாநாடு அவரது முடிவு. இந்த மாநாடு மகளிர் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் மாநாடு. அவரை என்னோடு ஒப்பிடக் கூடாது.

இவ்வாறு கனிமொழி பதில் அளித்தார்.

Friday, June 13, 2008

பணிந்தார் எடியூரப்பா தினசரி பூஜை நிறுத்தப்பட்டது

கருநாடக முதலமைச்சர் எடியூரப்பா பெயரில் மாநிலத்தில் உள்ள 34 ஆயிரம் கோயில்களிலும் நாள்தோறும், முதல் பூஜை செய்யப்படவேண்டும் என்று கருநாடக அமைச்சர் கிருஷ்ணய்ய செட்டி விடுத்திருந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப் பட்டு விட்டது. புதன்கிழமை வழங்கப்பட்ட உத்தரவு வியாழக்கிழமையே திரும்பப் பெறப்பட்டுள்ளது.

பகுத்தறிவாளரான வழக்குரைஞர் செல்வி பெல்லி என் பவர் உயர்நீதிமன்றத்தில் இந்த பூஜை உத்தரவை எதிர்த்து ரிட் வழக்கு தாக்கல் செய்தார். அன்று மாலை நடந்த அமைச் சரவைக் கூட்டத்தில் பூஜை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது எனும் சேதி பகுத் தறிவாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

அமைச்சரவைக் கூட்டத்தில் பூஜை உத்தரவு விவாதிக் கப்பட்டதாம். முதலமைச்சர் எடியூரப்பா பேசுகையில், ஏற்கெனவே உரப்பிரச்சினையில் மாட்டிக் கொண்டு பா.ஜ.க. அரசு தடுமாறுகிறது; இந்த நிலையில் பூஜைப் பிரச்சினை மேலும் சிக்கலையும், எதிர்ப் பையும் ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டாராம்.

எனினும் கிருஷ்ணய்ய செட்டி, உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆசார்யா ஆகிய இருவரும் பூஜை உத்தரவை ஆதரித்துப் பேசினராம். முதல மைச்சர்மீது தனக்கு இருக்கும் அன்பை வெளிக் காட்டுவதற்காக இந்த உத்தரவைப் போட்டதாக அமைச்சர் கூறினாராம். இதை ஏற்காமல், மற்ற அமைச்சர்கள் எதிர்த்துக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முடிவில் முதலமைச்சர் பெயரில் நாள்தோறும் பூஜை நடத்தும் உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

பொறுப்புணர்வோடு அமைச்சரவை நடந்துகொண்டது என நம்புவதற்கு வழியில்லை. புகழ் பெற்ற அரசியல் சட்ட வழக்கறிஞர் ரவிவர்ம குமார் இது தொடர்பான வழக்கில் வாதாடுவார் என்ற நிலையில், உயர் நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும் என்கிற அச்சத்தின் காரணமாகவே இது விலக்கிக் கொள்ளப்பட்டது என்றே கருதலாம்.

----------நன்றி: "விடுதலை" 13-6-2008

Thursday, June 12, 2008

கருநாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் மதக் கிறுக்குத்தனம்! வெறித்தனம்!!

ஆட்சியில் அமர்ந்ததும் அமராததுமாக ஆர்.எஸ்.எஸ். வெறிக் கொள்கைகளை அமல்படுத்திட கருநாடக பா.ஜ.க. அரசு தொடங்கிவிட்டது. முதலமைச்சர் எடியூரப்பா பெயரில் தினந்தோறும் கோயில்களில் அர்ச்சனை செய்யப்படுமாம். கொடுமை என்னவென்றால், அரசுக் கட்டுப் பாட்டில் உள்ள எல்லாக் கோயில்களிலும் அரசுச் செலவிலேயே அர்ச்சனை செய்யப்படுமாம். இதற்காக அரசு ஆணையே வழங்கப்பட்ட விசித்திரம் நடந்துள்ளது.

கிருஷ்ணையா செட்டி என்பவர் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். வீட்டு வசதித் துறை எனும் வசதியான துறை அமைச்சர். பிரதியுபகாரமாக முதலமைச்சருக்கு எதையாவது செய்ய வேண்டும் என நினைத்தார் போலும்! அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்து விட்டார். அர்ச்சனை செய்தால் மாநிலம் நன்றாக இருக்குமாம்.

இந்து அறநிலையத்துறை ஆணையர் டி.ஷாம் பட் என் பாருக்கு ஆணையிட்டுள்ளார். அரசுக் கோயில்கள் அனைத் திலும் பூஜைகள் முதலமைச்சர் பெயரில் நடத்தப்பட வேண்டும் என்று தாக்கீது பிறப்பித்துள்ளார். அவர் உடனே எல்லாக் கோயில்களுக்கும் அறிவுரை வழங்கி தினந்தோறும் பூஜை செய்யப்பட வேண்டு மெனக் கூறி விட்டார். அதில் முதலமைச்சரின் பெயரைக் குறிப்பிடவில்லை.

34 ஆயிரம் கோயில்களில்

இதனால் மாநிலத்தில் உள்ள 34 ஆயிரம் கோயில் களிலும் அரசு உத்தரவுப்படி பூஜைகள் செய்யப் படுமாம். மாநிலத்தில் சிக்கல்கள் நிலவுவதால் அமைதி நிலவிட கடவுளின் ஆசிகள் தேவை, அதற்குப் பூஜை செய்யவேண்டும் என்றார் மந்திரி கிருஷ்ணையா செட்டி. உரத்தட்டுப்பாட்டுச் சிக்கலில் இருந்து கருநாட காவின் இளம் பா.ஜ.க. ஆட்சி மீண்டு வருவதற்காகவும் கடவுளைத் துணைக்கு அழைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவரங்களையெல்லாம் செய்தியாளர்களிடம் தெரிவித்த அமைச்சர் செய்தி யாளர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கினார். பதவி ஏற்ற நாளன்றும் லட்டு பிரசாதம் வழங்கினார்.
இம்மாநிலத்தின் அரசுக் கோயில்கள் எல்லாவற்றிற்கும் ஆண்டு மானியத் தொகை 6 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. முன்பிருந்த கூட்டணி ஆட்சியில் இத்தொகை கோயில்களுக்குத் தக்கவாறு வேறுபட்டிருந்தது. ஒரு ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அளிக்கப்பட்டது. முந்தைய அமைச்சரவையின் நிதி அமைச் சராக இருந்த எடியூரப்பா கோயில் நிதியை 6. 12 கோடியிலிருந்து 21.48 கோடி ரூபாயாக உயர்த்தி அறிவித்திருந் தார்.

பகுத்தறிவாளர் வழக்கு

கருநாடகா மாநிலத்திலுள்ள சமூக நீதிக்கான வழக்கறிஞர்களின் மன்றத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும் சிறந்த அரசியல் சட்ட நிபுணருமான ரவிவர்மகுமார் அவர்களின் மகள் பெல்லி எனும் வழக்குரைஞர் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நீதிப் பேராய (ரிட்) வழக்கு தாக்கல் செய்து எந்தச் சட்டப் பிரிவின் கீழ் உள்ள அதிகாரப்படி இந்த அர்ச்சனை உத்தரவு பிறப்பிக் கப்பட்டது என்று கேட்டுள்ளார்.

பா.ஜ.க. வின்
மதச்சார்புத் தன்மை


ஆட்சியும் மாநிலமும் அமைதியாகத் திகழ ஆண்டவன் அருள் தேவை என்பது மடைத்தனம். இந்த மடைத்தனத்தின் அடிப்படையில், அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது மூடத்தனம். அதிலும் இந்து மதக் கோயில்களில் மட்டும் செய்யவேண்டும் என் பதும் அரசுப் பணத்தை இந்துக் கோயில்களுக்கு மட்டும் செலவு செய்வது என்பதும் இந் திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற கொள்கைக்கு எதிரானதாகும். இந்நிலையில் கருநாடக பா.ஜ.கட்சி அரசு தன் இந்து மதச் சார்புத் தன்மையை வெளிப்படையாகச் செயல் வடிவில் காட்டுவது கண்டிக்கத்தக்கது. கருநாடகப் பகுத்தறிவாளர்களைப் போல பலரும் பல பகுதிகளிலும் இத்தகு போக்குகளை எதிர்த்துக் கிளர்ந்து எழுந்து மதச்சார்பின்மையையும், பகுத்தறிவு மனப்பான்மையையும் வளர்த் திட வேண்டும்.

---------நன்றி: "விடுதலை"12-6-08

Monday, June 09, 2008

கச்சத் தீவு உரிமைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை பயணம்


தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீனவர் உரிமைக் கோரிக் கைப் பயணம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

கரூரில் நேற்று செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

திட்டத்தைப் பற்றி முடிவு செய்யும் அதிகா ரம் கர்நாடகத்துக்கு இல்லை. அவர்கள் காவிரியை உற்பத்தி செய்யவில்லை. பா.ஜ.க. தோன்றுவதற்கு முன்பே காவிரி இங்கு வந்து கொண்டு இருக் கிறது. மாநிலத்து மாநிலம் ஒரு பேச்சு என்று பா.ஜ.க. செயல் படுகிறது.
கடற்படை, கடலோரப் பாதுகாப்புப் படை இருந்தும் தமிழக மீனவர்களை இலங் கைக் கடற் படையினர் கடத்து வது, கொல்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 420 பேர் கடத்தப் பட்டு 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்களை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் அல்லது கச்சத் தீவு உரிமையை உறுதிப் படுத்த வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி 25 தேதி முதல் 30 தேதி வர கடற்கரை மாவட்டங்களில் மீனவர் உரிமை கோரிக் கைப் பயணத்தை எங்கள் கட்சி நடத்தவுள்ளது.
இவ்வாறு தா. பாண்டியன் கூறினார்.

கச்சத் தீவு உரிமைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை பயணம்

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீனவர் உரிமைக் கோரிக் கைப் பயணம் நடத்தப்படும் என்று அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

கரூரில் நேற்று செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

திட்டத்தைப் பற்றி முடிவு செய்யும் அதிகா ரம் கர்நாடகத்துக்கு இல்லை. அவர்கள் காவிரியை உற்பத்தி செய்யவில்லை. பா.ஜ.க. தோன்றுவதற்கு முன்பே காவிரி இங்கு வந்து கொண்டு இருக் கிறது. மாநிலத்து மாநிலம் ஒரு பேச்சு என்று பா.ஜ.க. செயல் படுகிறது.
கடற்படை, கடலோரப் பாதுகாப்புப் படை இருந்தும் தமிழக மீனவர்களை இலங் கைக் கடற் படையினர் கடத்து வது, கொல்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 420 பேர் கடத்தப் பட்டு 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மீனவர்களை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் அல்லது கச்சத் தீவு உரிமையை உறுதிப் படுத்த வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி 25 தேதி முதல் 30 தேதி வர கடற்கரை மாவட்டங்களில் மீனவர் உரிமை கோரிக் கைப் பயணத்தை எங்கள் கட்சி நடத்தவுள்ளது.
இவ்வாறு தா. பாண்டியன் கூறினார்.

Sunday, June 08, 2008

நாம் இந்து அல்ல

நாலு தலைச்சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்று தலைச்சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறுதலை சாமி, ஆறுமுகச்சாமி, ஆளிவாய்ச்சாமி பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள் காக்கை மீது பறக்கும் கடவுள், தலை மீது தைய்யலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் ரசமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவைகளை நமது தெய்வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழவேண்டும். இந்தச் சேதியைக் கேட்டால் உலக நாகரீக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிட கேவலமானவர்கள் என்று கேலி செய்வாரே. இந்த கண்ராவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நாம் தலையில் தூக்கிப்போட்டுக்கொள்ள, நமக்கு மனம் எப்படித்துணியும்? ஆகவேதான் நாம் இந்து அல்ல என்று கூறுகிறோம்!

---- பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரை - "ஆரிய மாயை" - 26.09.1943

Tuesday, June 03, 2008

வாழ்க மானமிகு கலைஞர்!

85 ஆம் ஆண்டில் அடி பதிக்கும் அய்ந்தமிழ் அறிஞர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள், 95 ஆண்டு காலம் வாழ்ந்து - உடலால் மறைந்தாலும், தத்துவத்தால் என்றும் வாழக்கூடிய தந்தை பெரியாரின் அருமைமிகு சீடராவார்.

தன்னைப்பற்றி தன்னிலை விளக்கமாகக் கூறும்போது, நான் மிகமிக எத்தனை மிக வேண்டுமானாலும் சேர்த்துக் கொள் ளுங்கள் - பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஒரு சமூகப் போராளிதான் கலைஞர்.
இவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும் - இந்த நிலையில் உள்ள ஒருவர்தான் ஒடுக்கப்பட்ட மக்களைப்பற்றிய உணர்வு ரீதியான சிந்தனையாளராக - செயல்படுபவராக இருக்க முடியும் என்று கணித்து, தம் ஆதரவு என்னும் பெரும்பலத்தைத் தந்தவர் தந்தை பெரியார்.

தந்தை பெரியாரின் கணிப்பு நூறு விழுக்காடு சரி என்பதை அன்றாடம் தன் பணிகள் மூலம் மெய்ப்பித்துக் கொண்டிருக்கும் சமூகநீதிச் சான்றாளராகவே திகழ்ந்துகொண்டு இருக்கிறார்.
தொழு நோயாளிகள்பற்றியும், கிராமங்களில் வாழ்வோர் தொழிற்கல்லூரிகளில் சேர்வது குறித்தும் வேறு யாருக்கு கவலை ஏற்பட்டது?

பிற்படுத்தப்பட்டோரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குறித்தும், சிறுபான்மையினர்க்கு இட ஒதுக்கீடு குறித்தும் எந்த மூளை சிந்தித்தது? அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்ற பிரச்சினை வந்தபோது, அலட்சியப்படுத்தாமல், அனைத்துக் கட்சிகளையும் கூட்டி, ஆலோசனை நடத்தி, அதற்குரிய செயல்பாட்டில் அடியெடுத்து வைத்த கால் எந்தக் கால்?
வெட்டியான் என்று கேவலப்படுத்தப்பட்டவர்களை மயான உதவியாளர் ஆக்கியது எந்த ஆட்சி? அவர்களை அரசு ஊழியர் களாகவும் அறிவித்தது யார்?

எத்தனையோ சொல்லலாம் - இடம் தராது ஏடு! இதன் காரணமாகத்தான் ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என் பக்கம் இருக்கவேண்டும் என்று ஆதரவுக் கரம் நீட்டுகின்றார் இந்த அய்யாவின் சீடர் - அண்ணாவின் தம்பி.

தேர்தல் அறிக்கை என்றால் ஒரு சம்பிரதாயம் - ஒரு அரசியல் சடங்கு என்று கருதப்பட்ட ஒரு நிலையில், தேர்தல் அறிக்கை யையே மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக்கி, மக்கள் மன்றத்தில் விவாத மணத்தை உலவ விட்ட ஒரு மதியூகம் இந்த மானமிகுவுக்கல்லால் வேறு எவருக்கு உதித்தது?

தேர்தல் அறிக்கையைக் கையில் வைத்துக்கொண்டு அன்றாடம் வகுப்புப் பாடங்களை ஒழுங்காகப் படிக்கும் ஒரு நல்ல மாணவன் போல, ஒவ்வொரு அறிவிப்பையும் செயல்படுத்தி, செயல்படுத்தி, நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் முதல் மாணாக்கன்போல, தேர்தல் அறிக்கையில் கண்ட அம்சங்களை அம்சமாக நிறை வேற்றிவரும் நிறைகுடம் இவரன்றி வேறு யார்?

ஆளுநர் மாளிகைக்குள் பதவிப் பிரமாணம் எடுக்காமல், மக்கள் கடலின்முன் உறுதிமொழி எடுத்து, அந்த இடத்திலேயே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற ஆணைக்குக் கைசாற்று இட்டு, அமல்படுத்திய அந்த அதிசயத்தை இவரன்றி நிகழ்த்திக் காட்டியவர் யார்?

எந்நிலையிலும் ஈடு இணையற்ற கதிராக - முத்தாரமாக, முரசொலியாக, மறவன் மடலாக தமிழர் மத்தியில் மகத்தான ஆசனம் போட்டு, அமர்ந்திருக்கும் மாண்புமிகுவைவிட மானமிகுவை நேசிக்கும் - சுவாசிக்கும் ஒரு தலைவரின் பிறந்த நாள் ஜூன் 3.
அந்த மகுடத்திற்குப் புதிய நவரத்தினங்கள் தேவையில்லை - அதில் சிகரங்களைக் கடந்தவர்.
அவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவது - தந்தை பெரியார்தம் தத்துவம் - அறிஞர் அண்ணாவின் அணுகுமுறை - இலட்சோப லட்ச சுயமரியாதைச் சுடரொளிகளின் தியாகம் - தமிழ் உணர்வு - தமிழின உணர்வு - பகுத்தறிவுச் சிந்தனைகள் - சமூகநீதிச் சங்க நாதம் - பெண்ணுரிமை - மனித உரிமை - மனித நேயம் - சமத் துவம் என்கிற கோட்பாடுகள்மீது நமது அக்கறையைச் செலுத்து வதற்கும் - அதன் தொடர்ச்சியில் வெற்றிகரமாகப் பயணிப்பதற்கு மான ஒரு வரலாற்றுக் குறிப்பின் குறியீடுதான் 85 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட இயக்கச் செம்மல் மானமிகு கலைஞர் அவர்களின் பிறந்த நாள்!
இளைஞர்களுக்கு அவ்வப்போது கலைஞர் அவர்கள் எச்சரிக்கையாகச் சொல்லிவரும் கருத்துகள், திராவிட இயக்கச் சிந்தனைகள் மீது இளைஞர்கள் அழுத்தமாகச் செலுத்தவேண்டிய அக்கறை, இளைஞர்களை அந்தப் பாட்டையில் ஆற்றுப்படுத்த வேண்டிய அவசியம் தத்துவ ரீதியாக - ராமராஜ்ஜியமா, பெரியார் ராமசாமி ராஜ்ஜியமா என்ற வினா எழும்பியிருக்கும் இக்காலகட்டத்தில் அகில இந்தியாவுக்கே நமது ஒளியைப் பரவச் செய்யும் கடப்பாடு - இவற்றை நம் இரத்த நாளங்களில் உரு ஏற்றிக் கொள்வதற்கும், அதனைச் செயலாக்க நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்ளும் உணர்வுகளுக்கும் ஒரு சரியான உந்துதலைக் கொடுக்கும் விழாவாக இதனைக் கருதுவோம் - இந்தத் தள்ளாத வயதிலும் தள்ளாத இந்த உணர்வுகள்தான் அவரை ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன என்பதை அவர்தம் அண்மைக்கால எழுத்துகளும், உரைகளும், உரையாடல்களும் வெளிப்படுத்துகின் றன. அந்த வெளிச்சத்தில் வீறுநடை போட இளைஞர்களே வாருங்கள் - இந்த உணர்வு பெருக பெருக கலைஞர் ஆயுளும் பெருகும் - வளரும் - வாழ்க மானமிகு கலைஞர்!

----------நன்றி: "விடுதலை" தலையங்கம் -02-06-2008

Monday, June 02, 2008

பெண்களை இழிவுபடுத்தும் ஜோதிடம்

இன்று ஈழத் தமிழர்கள் மத்தியிலே காதல் திருமணம், பேச்சுத் திருமணம் என்று இரு வகையான திருமணங்கள் காணப்படுகின்றன. முன்னைய காலத்தில் தமிழர்கள் காதல் திருமணம் மட்டுமே செய்து வந்தார்கள். அதுவே தமிழர் பண்பாடாகவும் இருந்தது. பின்பு தமிழினத்திற்குள் ஆரியர்களால் வர்ணாச்சிரம தர்மத்தின் பெயரில் ஜாதிகள் திணிக்கப்பட்ட பொழுது, ஜாதியைக் காப்பதற்-காக பேச்சுத் திருமணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்குள் பார்ப்பனர்கள் எண்ணில் அடங்காத ஆபாசங்களையும் நுழைத்து விட்டனர். இன்று வரை ஜாதியோடு, பேச்சுத் திருமணத்தையும் எமது தமிழர்கள் கைவிடாமல் கட்டிக் காத்து வருகிறார்கள். இதில் இடையிடையே காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா? என்று பட்டிமன்றமும் நடத்துவார்கள்.

இந்த பேச்சுத் திருமணத்தில் பொருத்தம் பார்ப்பது முக்கியமான ஒன்றாக இருக்கும். இதைப் போல ஒரு முட்டாள்தனமான விடயம் உலகத்தில் இருக்க முடியாது. இந்தப் பொருத்தம் பார்ப்பதில் “திரிம்சாம்சம்” போடுதல் என்கின்ற ஒரு விடயம் உண்டு. இதன் மூலம் வரப் போகும் பெண்ணின் குணத்தை அறிய முடியுமாம்.

இதன்படி ஏறக்குறைய 40 வீதமான தமிழ்ப் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் லக்கினத்தை கணித்து எந்த திரிம்சாம்சத்தில் எவ்வகையான குணங்களை அப் பெண் கொண்டிருப்பாள் என்பதை சோதிடரத்னங்கள் பின்வரும் முறையில் கணிப்பார்கள். அதனைப் படியுங்கள்.

ஒரு பெண்ணிண் லக்கினம் மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்தால்:

- செவ்வாய் திரிம்சாம்சாக இருந்தால் அவள் பூப்படைவதற்கு முன்பே தகாத உறவு வைத்திருப்பாள்.
- சுக்கிரனின் திரிம்சாம்சமாக இருந்தால் கணவனைத் தவிர பிற ஆடவருடன் தகாத உறவு வைத்து இருப்பாள்.
- புதனின் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் சூழ்ச்சிக்காரப் பெண்ணாக இருப்பாள்

கன்னி, மிதுனம் லக்கினங்களுக்கு:

- செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் ஒரு சூழ்ச்சிக்காரப் பெண்ணாக இருப்பாள்.
- சுக்கிரனின் திரிம்சாம்சமாக இருந்தால் அவள் பிற ஆடவருடன் தொடர்பு வைத்து இருப்பாள்.
- சனி திரிம்சாம்சத்தில் பிறந்தால் அந்த பெண்ணிற்கு சிற்றின்பங்களில் நாட்டமிருக்காது.

ரிஷபம், துலாம் லக்கினமாக ஆனால்,

- செவ்வாய் திரிம்சாம்சமானால் பெண்ணின் நடத்தை திருப்திகரமாக இருக்காது.
- சனி திரிம்சாம்சமாக இருந்தால் அந்தப் பெண்ணுக்கு 2ஆம் திருமணம் ஆகும்.

கடக லக்கினத்திற்கு

- செவ்வாய் திரிம்சாம்சமாக இருந்தால் நல்ல நடத்தை உள்ள பெண்ணாக இருக்க மாட்டாள்.
- சுக்கிரன் திரிசாம்சமும் நல்ல நடத்தை உள்ள பெண்ணாக இருக்க மாட்டாள்.
- சனி திரிம்சாம்சமாக இருந்தால் மிகவும் கொடிய குணமுள்ளவளாக இருப்பாள். கணவனையே கொல்லும் அளவிற்கு அவளுக்கு கொடூரம் இருக்கும்

சிம்ம லக்கினமாக இருந்தால்,


- சுக்கிரனின் திரிம்சாம்சத்தில் இருந்தால் நடத்தை நன்றாக இருக்காது.
- புதனின் ஆதிக்கத்திலிருந்தால் குணத்தில் ஆண்மைத்தனம் இருக்கும்.

மகரம், கும்பம் லக்கினமாக இருந்தால்,

- சுக்கிரன் ஆதிக்கத்திலிருந்தால் நல்ல பெண்ணாக இருக்க மாட்டாள்.
- சனி திரிம்சாமசத்திலிருந்தால் கீழ்த்தரமான ஆண்களுடன் சேருவாள்.
தனுசு, மீனம் லக்கினமாக இருந்தால்,
- சுக்கிரனின் ஆதிக்கத்திலிருந்தால் நடத்தை நன்றாக இருக்காது.

----------- நன்றி:- "www.webeelam.com"


-