கருநாடக முதலமைச்சர் எடியூரப்பா பெயரில் மாநிலத்தில் உள்ள 34 ஆயிரம் கோயில்களிலும் நாள்தோறும், முதல் பூஜை செய்யப்படவேண்டும் என்று கருநாடக அமைச்சர் கிருஷ்ணய்ய செட்டி விடுத்திருந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப் பட்டு விட்டது. புதன்கிழமை வழங்கப்பட்ட உத்தரவு வியாழக்கிழமையே திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பகுத்தறிவாளரான வழக்குரைஞர் செல்வி பெல்லி என் பவர் உயர்நீதிமன்றத்தில் இந்த பூஜை உத்தரவை எதிர்த்து ரிட் வழக்கு தாக்கல் செய்தார். அன்று மாலை நடந்த அமைச் சரவைக் கூட்டத்தில் பூஜை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது எனும் சேதி பகுத் தறிவாளர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
அமைச்சரவைக் கூட்டத்தில் பூஜை உத்தரவு விவாதிக் கப்பட்டதாம். முதலமைச்சர் எடியூரப்பா பேசுகையில், ஏற்கெனவே உரப்பிரச்சினையில் மாட்டிக் கொண்டு பா.ஜ.க. அரசு தடுமாறுகிறது; இந்த நிலையில் பூஜைப் பிரச்சினை மேலும் சிக்கலையும், எதிர்ப் பையும் ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டாராம்.
எனினும் கிருஷ்ணய்ய செட்டி, உள்துறை அமைச்சர் வி.எஸ். ஆசார்யா ஆகிய இருவரும் பூஜை உத்தரவை ஆதரித்துப் பேசினராம். முதல மைச்சர்மீது தனக்கு இருக்கும் அன்பை வெளிக் காட்டுவதற்காக இந்த உத்தரவைப் போட்டதாக அமைச்சர் கூறினாராம். இதை ஏற்காமல், மற்ற அமைச்சர்கள் எதிர்த்துக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
முடிவில் முதலமைச்சர் பெயரில் நாள்தோறும் பூஜை நடத்தும் உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.
பொறுப்புணர்வோடு அமைச்சரவை நடந்துகொண்டது என நம்புவதற்கு வழியில்லை. புகழ் பெற்ற அரசியல் சட்ட வழக்கறிஞர் ரவிவர்ம குமார் இது தொடர்பான வழக்கில் வாதாடுவார் என்ற நிலையில், உயர் நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும் என்கிற அச்சத்தின் காரணமாகவே இது விலக்கிக் கொள்ளப்பட்டது என்றே கருதலாம்.
----------நன்றி: "விடுதலை" 13-6-2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment