Monday, June 16, 2008

இராணன் பெரிய வீரன்;சீதையைக் கடத்தவில்லை; அடைக்கலம் கொடுத்தான்

இராணன் பெரிய வீரன்;

சீதையைக் கடத்தவில்லை; அடைக்கலம் கொடுத்தான்

சிறீலங்கா, வங்காளத் தொன்மை இலக்கியம் கூறுகிறது



சிறீலங்காவிலும் மற்றும் வங்காளத்தில் வழங்கப்படும் ராமாயணத்தில், இராவணனைப்பற்றி மிகவும் உயர்வாகக் கூறப்பட்டிருக்கிறது.

இராவணன் சீதையை எடுத்துச் செல்லவில்லை; அதற்கு மாறாக, ராமனும், லட்சுமணனும் சீதையைப் பெருந்தொல்லைக்கு ஆட்படுத்தினார்கள்; ஆகையால், சீதை அடைக்கலம் தேடிச் சென்றாள். அவளுக்கு இராவணன் அடைக்கலம் அளித்தான்.

இவ்வாறு, இலங்கையில் உள்ள ராமாயணம் தெரிவிப்பதாக, பிலியந்தாலா எனும் இடத்தில் உள்ள நாட்டியப் பள்ளியைச் சேர்ந்த பபாலு விஜெகுணவர்தனெ தெரிவித்தார்.
கேரளத்தில் உள்ள கதக்களி நாட்டியத்தில் இராவணன் வில்லனாகக் காட்டப்பட்டாலும், அவனுடைய உயர்ந்த குணங்களும் வெளிப்படுகின்றன; அவனுடைய அறிவுத் திறமும், வீரமும் அதில் வெளிப்படு கின்றன.

மகா ராவணா

ஆனால், சிறீலங்காவில் தொன்மைக் காலத்தில் இருந்து சொல்லப்படும் கதையில் இராவணன் உயர்ந்த குணம் உடையவனாகச் சொல்லப்படுகிறது. அரிசென் அஹுபுது மற்றும் ஜயந்த்த பதிராரச்சி ஆகிய கற்ற புலவர்களை, விஜெகுணவர்தனெ கலந்து ஆலோசித்தார். பின்பு, லங்கா அவதார சூத்ரா எனும் நூலின் அடிப்படையில் ஒரு நாட்டிய நாடகத்தை உருவாக்கினார். அதற்கு மகா ராவணா எனப் பெயர். மே 30 இல் கொழும்புவில் அரங்கம் நிரம்பி வழிய இது அரங் கேற்றப்பட்டது.

மகா ராவணா எனும் நாட்டிய நாடகத்தில் ராமனும், லட்சுமணனும் வீரர்களாகவும், நேர்மையாளர்களாகவும் தோன்றுவதில்லை. ஆனால், இராவணன் நேர்மைமிக்க வீரனாகத் திகழ்கிறான்.

மறைக்கப்படும்
உண்மைகள்


வாலியும், சுக்ரீவனும் போரிடும்பொழுது, போர் அறத்திற்கு மாறாக, ராமன் பின்புறம் இருந்து அம்பு எய்துவது காட்டப்படுகிறது.இந்தியாவில் உள்ள இராமாயணத்தில் மறைக்கப்படும் உண்மைகளை தான் உலகத்திற்கு வெளிப்படுத்தியிருப்பதாக, விஜெகுணவர்தனெ கூறினார்.

---------- நன்றி: "விடுதலை" 16-6-08

No comments: