Sunday, June 15, 2008

ஸ்டாலின் பலத்தை திருநெல்வேலி மாநாட்டில் நிரூபித்தார். இப்போது உங்கள் பலத்தை காட்ட இந்த மாநாடு நடத்தப்படுகிறதா? -கனிமொழி பேட்டி


கடலூரில் தி.மு.க. மகளிரணி முதல் மாநில மாநாட்டு கொடியேற்று விழா முடிந்த தும் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

கேள்வி: இத்தனை வருடங்கள் கழித்து முதல் மகளிர் அணி மாநாடு நடத்த காரணம் என்ன?

பதில்: மகளிர் அணி சார்பில் மாநாடு நடத்த வேண்டும் என்று சில வருடங்களாகவே தலைவரிடம் கேட்டு வந்திருக்கிறோம். இப்போது தான் மாநாடு நடத்துவதற்கு அனு மதி தந்திருக்கிறார். மற்றபடி இப்போது மாநாடு நடத்து வதற்கு என்று முக்கிய காரணம் எதுவும் இல்லை.

கேள்வி: மாநாட்டின் நோக்கம் என்ன?

பதில்: பெண்கள் விழிப் புணர்வு அடைய வேண்டும், சட்டமன்றம், நாடாளுமன்றத் தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் மாநாடாக இது இருக்கும். இதனை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த மாநாடு அந்த இட ஒதுக் கீட்டை பெற்றுத் தரும் என்று நம்புகிறோம். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வும், எழுச்சியும், மகிழ்ச்சியும் இந்த மாநாடு ஏற்படுத்தும்.

கேள்வி: அ.தி.மு.க.விடம் பெண்கள் வாக்கு வங்கி உள்ளதால் உங்கள் பக்கமும் பெண்கள் வாக்கு வங்கியை இழுக்க நடக்கும் முயற்சியாக இந்த மாநாடு இருக்குமா?

பதில்: மற்ற கட்சிகளுக்கு தான் பெண்கள் ஆதரவு இருக்கிறது என்று கூறுவது ஒரு மாயை. தி.மு.க. ஆரம்பித்த காலத்தில் இருந்தே பெண்கள் ஆதரவு எங்களுக்கு இருந்து வந்திருக்கிறது. இன்னும் சொல் லப் போனால் பெண்களுக்கு அதிக உரிமைகளை பெற்றுத் தந்ததும், பெண்கள் மேம் பாட்டுக்கு பாடுபடுவது போன்ற செயல்களில் அதிக மாக ஈடுபடுவது தி.மு.க. தான். தி.மு.க.வை மேலும் அதிகமான பெண்களிடம் எடுத்துச் செல்வ தற்கும், பெண்கள் தி.மு.க.வில் அதிகமாக இணைவதற்கும் இந்த மாநாடு பெரிதும் உதவும்.

கேள்வி: உங்களாலும் ஆள் பலத்தை காட்ட முடியும் என்று காட்டுவதற்காக இந்த மாநாடா?

பதில்: அப்படி எந்த நிர்ப் பந்தமும் எங்களிடம் இல்லை. தி.மு.க.வில் ஏற்கெனவே நிறைய பெண் தலைவர்கள் இருக் கிறார்கள். எந்த குறிப்பிட்ட நபரையும் பிரபலப்படுத்த இந்த மாநாட்டை நடத்த வில்லை.

கேள்வி: உள்ளாட்சித்துறை அமைச்சர் அவரது பலத்தை திருநெல்வேலி மாநாட்டில் நிரூபித்தார். இப்போது உங்கள் பலத்தை காட்ட இந்த மாநாடு நடத்தப்படுகிறதா?


பதில்: மு.க.ஸ்டாலின் ஒரு தலைவர். நான் தலைவர் அல்ல. நெல்லை மாநாட்டுக்கும் கடலூர் மாநாட்டுக்கும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அந்த மாநாடு அவரது முடிவு. இந்த மாநாடு மகளிர் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து நடத்தும் மாநாடு. அவரை என்னோடு ஒப்பிடக் கூடாது.

இவ்வாறு கனிமொழி பதில் அளித்தார்.

No comments: