Sunday, February 17, 2008

வாஞ்சிநாதனின் நயவஞ்சகம்

எழுதப்பட்ட வரலாறு பெரும்பாலும் அரசர்களுடைய வரலாறாகவும் ஆதிக்க சாதித் தலைவர்களின் வரலாறாகவுமே இருக்கிறது. குறிப்பிட்ட சாதியினரை மகிழ்விக்க வரலாற்றில் பல சம்பவங்களை திரித்தும் , பலவற்றை மறைத்துமே நமக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ் துரையை வாஞ்சிநாதன் என்பவர் மணியாட்சி ரயில்நிலையத்தில் சுட்டுக்கொன்றார் என்பதுதான் நாம் சிறுவயது முதல் படித்து நமது சுதேச உணர்வுகளை தூண்டிய செய்தி.இதனை படிக்கும் அனைவரும் வாஞ்சியை ஒரு வரலாற்று நாயகனாகவும் சுதந்திரப்போராட்ட தியாகியாகவும் நினைத்து வந்தோம்.
ஆனால் செங்கோட்டையைச் சேர்ந்த பலர் கூறியது , ஆஷ்துரை திருநெல்வேலி ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அனைத்து சாதியினரையும் சமமாக நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சாதிபாகுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் மதிய உணவு உண்ணவேண்டும் என்றும் ஒரே குடத்தில் தண்ணீர் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அவர் செய்த மகத்தான சாதனை , குற்றால அருவியில் தெய்வங்களும் , தெய்வத்திற்க்கு அடுத்தபடியான பிராமணர்களுமே குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும் குளிக்க கூடாது என்றிருந்த மறபை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் ஆஷ்.

இதுபோன்ற சமூக சீர்திருத்தங்களை உத்தரவிட்ட்து மட்டுமில்லாது தானே முன்னின்று நட்த்தவும் செய்தார்.அவரின் இந்த செயல்களால் ஆத்திரமடைந்த வாஞ்சிநாதன் “பாரத மாதா சங்கம் “ என்ற பெயரில் பிராமண இளைஞர்களையும் , வெள்ளாளர் இளைஞர்களையும் ( அக்காலத்தில் பிராமணர்களுக்கு தாங்கள் தான் இணையானவர்கள் என்று காட்டிக்கொள்ள அவர்களைப்போலவே நடந்துக்கொண்ட இனம்) சேர்த்துக்கொண்டு ஆஷ் செய்த சீர்திருத்தங்களை எதிர்க்க ஆரம்பித்தனர்.

ஆஷ் தொடர்ந்து சாதியிலான வேறுபாட்டை எதிர்த்து வந்தார். பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அருந்த்தி சமுதாயத்தைச் சேர்ந்த பெண், பிராமணர்கள் வசிக்கும் தெரு வழியாக மருத்துவமனைக்கு போக வேண்டியதிருந்தது. அவர்களை
பிராமணர்கள் உள்ளே விட மறுத்தனர்.
அப்போது அவ்வழியாக வண்டியில் வந்த ஆஷ்துரையும் அவரது மனைவியும் அந்தப்பெண்னை அவர்கள் வண்டியிலேயே ஏற்றி பிராமணர் தெரு வழியாக சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரின் இந்த செயல்களால் பிராமண குலத்திற்க்கு இழுக்கு நேர்ந்ததாக பாரத மாதா சங்கத்தினர் கருதினர்.அதனால் ஆஷை கொன்றுவிட தீர்மானித்தனர். அதன்படியே வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் சட்டைப்பையில் இருந்த கடித்தின் மூலம் அந்த சங்க உறுப்பினர்களின் ஆதிக்க சாதி வெறி தெரிகிறது.
வார்த்தை மாறாமல் அக்கடிதம் அப்படியே :

“ ஆங்கில சத்துருக்கன் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு ,அழியாத சனாதன தர்மத்தை காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள்.ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்துருவாகிய ஆங்கிலேயரைத் துரத்தி தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலை நாட்ட முயற்சி செய்து வருகிறான்.எங்கள் ராமன்,சிவாஜி,கிருஷ்ணன்,குரு கோவிந்தர்,அர்ஜுன்ன் முதலியோர் இருண்ட்க தேசத்தில் கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெரும் முயற்சி நடந்து வருகிறது.அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனையே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதனைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையோனாகிய நான் இன்று இச் செய்கை செய்தேன்.இது தான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை”.

இப்படிக்கு,
R. வாஞ்சி ஜயர்.

நியாயமாப்பார்த்தா தீண்டாமையை எதிர்த்து போராடி அதில் ஒரு சாதிவெறி பிடித்த மனிதனால் உயிர் இழந்த ஆங்கிலேய பிரபுவுக்கு நாம் அஞ்சலிதான் செலுத்த வேண்டும்

ஆதாரம்: அருந்ததியர் வாழும் வரலாறு . ஆசிரியர் : மாற்கு.

-------- நன்றி: www.indianchaplin.blogspot.com

No comments: