Monday, February 04, 2008

பெரியாரா? பாரதியாரா?

கேள்வி:பெண்ணடிமைத்தனம் தீர களத்தில் இறங்கிய பெரியாரைப் பாராட்டாமல் பாடல் எழுதிய பாரதியாரைத் தானே வெகுமக்கள் பாராட்டுகின்றனர்?

தி.க.தலைவர் கி.வீரமணி அவர்களின் பதில்:
நம்மை நீண்ட நாளாக உறுத்தும் பிரச்சனை இது.பெண்ணுரிமைக்கே ஏதோ சுப்ரமணிய பாரதியார் தான்"அத்தாரிட்டி" மாதிரி, "பாரதி கண்ட புதுமைப்பெண் " என்றெல்லாம் முற்போக்குச் சிந்தனை உள்ளவர்கள் கூட"ஒரு வழிப்பார்வையாளராக" இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.

பெரியார் கண்ட "புரட்சிப்பெண்ணுக்கும்", பாரதி கண்ட "புதுமைப்பெண்ணுக்கும்" மிகுந்த வேறுபாடு உண்டு.எங்கும் மேற் சொன்ன சொற்றடர்கள் விவாதப் பொருளாய் பரவிவிடல் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும்.இன்னும் சில "அறிஞர்கள்" பெரியாருக்கு முன்பே பாரதி பெண்ணுரிமை பற்றி பேசினார் என்று காலக்கணக்கினை மட்டும் காட்டி மறைமுகமாக பெரியாரைப் பின்னுக்கு தள்ளிவிட முயலுகின்றனர். காலமா முக்கியம்?கனபரிமாணம்,பெண்ணுரிமை பற்றிய பேச்சு மட்டுமா? கொள்கை,திட்டம்,இயக்கம்-இந்த அடிப்படை தேர்வில் "பாரதி" மதிப்பெண் பெற முடியாதே!
-------"விடுதலை"-ஞாயிறுமலர்- 23-4-2000
----------------- நூல்: "அறிந்து கொள்வீர் புரிந்து கொள்வீர்"

நன்றி:www.thamizhoviya.blogspot.com

No comments: