Monday, February 25, 2008

பெரியார் வாழ்க!

வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக் கென்றும் இளையார்!
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமிப் பெரியார் வாழ்க!
சமயவெறி தணிக என்றார்;
சாதிவெறி தணிக என்றார்;
சகோதரர் போல்
அமைக என அறிவித்தார்!
பெண்களெலாம் நல்லுரிமை
அடைக என்றார்!
எமை அகத்தும் புறதினிலும்
திருந்துதற்கே எம்பெருமான்
சொன்ன தெல்லாம்,
இமயமலை இல்லையென்று
சொன்னதுபோல் எண்ணினோம்;
பின் தெளிந்தோம்!
பயிர் போன்றோர் உழவருக்கு!
பால்போன்றோர் குழந்தைகட்கு!
பசும்பாற் காட்டித்
தயிர் போன்றார் பசித்தவர்க்கு!
தாய்போன்றோர் ஏழையர்க்கு!
தகுந்தவர்க்குச்
செயிர் தீர்த்த தவம் போன்றார்!
செந்தமிழ் நாட்டிற் பிறந்த
மக்கட்கெல்லாம்,
உயிர் போன்றார்! இங்கு வந்தார்;
யாம் கொண்ட மகிழ்ச்சிக் கோர்
உவமை உண்டோ?

------------ புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

No comments: