Wednesday, April 09, 2008

சங்கராச்சாரியும், பொதுமக்களும்....

நம் பொதுமக்களில் பலர் சங்கராச்சாரி என்பவர் தீண்டாமை ஒழிப்பு என்பதைக் கண்டித்துப் பேசியதாகப் பத்திரிக்கைகளில் வந்த விஷயங்களைப் பார்த்து பார்ப்பனரல்லாத இந்து மக்களில் பலர் ஆத்திரமடைந்து சங்கராச்சாரியைக் கண்டித்துப் பேசுகிறார்கள். இதில் அறிவுடைமை இருப்பதாக நான் கருதவில்லை.

சங்கராச்சாரி சொன்னதென்ன? தீண்டாமை என்பது இந்துமதக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இந்துக்களில் ஒவ்வொருவருக்கும் தீண்டாமையை அனுஷ்டிக்க கடைபிடிக்க உரிமை உண்டு. ஒருவனை மற்றவன் தீண்டத்தகாதவன் என்று கருதி அதன்படி நடந்து கொள்ளுவது சட்டப்படிக் குற்றமாகாது என்பதாகச் சொல்லி இருக்கிறார்.

இதில் அவர் மதத்தையும், மனுதர்மத்தையும், அடிப்படையாகக் கொண்ட அரசமைப்புச் சட்டத்தையும் ஆதாரம் காட்டிப் பேசி இருக்கிறாரே ஒழிய, தான் தோன்றித்தனமாக அவர் பேசவில்லை என்பது எனது கருத்து. எப்படி என்றால் தீண்டாமை என்பது இந்து மதத்தில் இருக்கிறது என்பதோடு தீண்டாமை இந்து மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதை இந்துக்களில் யாராவது மறுக்க முடீயுமா?ம்றும் இதை - தீண்டாமை என்பதை - சாஸ்திரம் மதம் கோயில் கடவுள் இவை சம்பந்தமான சட்டம் அனுமதிக்கிறது என்பதை யாராவது மறுக்க முடியுமா? இதுமாத்திரமா?

இந்துக்களில் இந்து மதஸ்தர்களில் ஒவ்வொரு இந்துவும் தீண்டாமையையை ஏற்றுக் கொண்டு அதற்கேற்பவே நடந்து வருகிறான் என்பதை யாராவது மறுக்க முடியுமா? சட்டம் - இன்று நமக்கு அமுலிலுள்ள இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது என்ன சொல்கிறது?

சட்டத்தின் மூலாதாரக் கொள்கை என்பதில் மூலாதாரக் கொள்கை என்றால் இந்திய ஆட்சிக்கு எந்தக் கட்சிக்காரன் தி.மு.க. கம்யூனிஸ்ட் உள்பட எந்தக் கட்சிக்காரன் - இந்து மத நம்பிக்கை இல்லாத - கடவுள் நம்பிக்கை இல்லாத எந்த கட்சிக்காரன - ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியாத தன்மை பெற்ற மூலாதாரக் கொள்கை என்பது என்ன சொல்லுகிறது?

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் மததருமப்படி விஷயங்களைக் கருதவும், கருத்தை வெளியிடவும், மத தருமத்தை நம்பவும், மத தருமப்படி வணங்கவும் (நடக்கவும்) நடந்து கொள்ளவும் உரிமை உண்டு என்பதாகும். ஆகவே இந்த மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக எந்தக் கட்சியார் எந்தவித நம்பிக்கைக்காரர்கள் ஆட்சிக்கு வந்து எந்த அளவுக்கு ஏகமனதாகத் தீர்மானித்துக் கொண்டாலும் அது சட்டப்படி செல்லாது என்பதாக நம் அரசமைப்பச் சட்டத்தின் தன்மை இருக்கிறது. அதை அனுசரித்து இன்றைய நடப்பிலும் இந்துமத சம்பந்தக் கோவில்களில் பார்ப்பானைத் தவிர மற்ற எந்த எந்த இந்துவும் கள் இருக்கும் இடத்திற்குள் செல்லக் கூடாது அதாவது கிட்ட நெருங்கவே கூடாது. கண்டிப்பாய் அங்கு இருக்கும் கடவுள் என்பதைத் தொடவும் கூடாது. ஆனால் பார்ப்பான் மாத்திரம் போகலாம் நெருங்கலாம் தொடலாம். மற்றவன் தொட்டால் தண்டனை இந்தப்படி சட்டம் மாத்திரம் அல்லாமல் அனுஹ்டானத்திலும், நடப்பிலும், பழக்கத்திலும் இருக்கிறதே! இதைத்தான் சங்கராச்சாரி சொன்னார்.

சங்கராச்சாரி மாமாத்திரமல்லாமல் இராஜாஜி முதல் எல்லர் பார்ப்பனர்களும் சொல்லுகிறார்கள். இந்தப்படி தானே எல்லா ( பார்ப்பனரல்லாத) இந்துமக்களும் பின்பற்றி வருகிறார்கள்? ஆகவே மத தருமத்திலும்; சட்டத்திலும் அமுலிலும் தீண்டப்படாத ( பார்ப்பனரல்லாத மக்கள் என்பவர்களால் ஏற்று நடந்து கொண்டு வரும் விஷயத்தைத் தான் சங்கராச்சாரி சொன்னார்.

மற்றும் அரசமைப்புச் சட்டப்படி ஒரு விஷயத்ததைப் பற்றி கருதவும், எண்ணவும், நம்பவும், நம்பிக்கைப்படி நடக்கவும், நடக்க வேண்டுமென்று சொல்லவும், உரிமை பாராட்டவும் சங்கராச்சாரி மாத்திரமல்லாமல் எந்த (இந்து) மனிதனுக்கும் சுதந்திரம் உண்டு! உண்டு! உண்டு!!

இதனால் தான் நான் சொல்லுகின்றேன் உண்மையில் தீண்டாமை என்பதன் மூலம் இருந்து வரும் இழிவு நீங்க வேண்டுமானால் - இந்திய ஆட்சிக்கோ அல்லது தமிழ்நாடு ஆட்சிக்கோ இந்துக்கள் ஆளுவது என்பது ஒழிக்கப்பட்டு ஒரு முஸ்லிம் ஆட்சியோ அல்லது கிறிஸ்துவ ஆட்சியோ அல்லது ஒரு ஒரு பவுத்த ஆட்சியோ ஏற்பட்டால் தான் முடியும் என்பதோடு இந்து (இந்திய) ஆட்சிக்குள்ளிருந்து கொண்டு தீண்டாமைத் தத்துவப்படி சுதந்திர - ஜனநாயக - சுய ஆட்சியால் முடியாது - முடியாது ஒரு நாளும் முடியாது என்கின்றேன்.

சங்கராச்சாரி தீண்டாமை ஒழியாது என்று வாயினால் சொல்லுகிறார். திருவல்லிக்கேணி மைலாப்ப+ர் முதலிய ஆயிரக்கணக்கான கோவில்களில் மணி அடிக்கும் ஒழுக்கம் கெட்ட பார்ப்பான் நம்மை நீ சூத்திரன் - தொடக் தகாதவன் நெருங்கக் கூடாது - உள்ளே வராதே வெளியே நில் மீறினால் தண்டனை என்கின்றான்.

நமது மாஜி முதல் மந்திரி பக்தவத்சலனார் அது தான் தருமம் அப்படித்தான் நடக்கும் என்று மந்திரியாய் இருக்கும் போதே திரு. எஸ்.வி. இராமசாமி திருச்செந்தூர் கோயிலுக்குப் போனதால் ஏற்பட்ட அவமானம் பற்றிச் சொன்னார். ஆகையால் நாம் இப்போது அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தினாலும் தீண்டாமை போகாது. கொளுத்தியும் பார்த்து விட்டோம்! தீண்டாமையை ஜாதியை கடுகு அளவும் அசைக்க முடியவில்லை.

எனவே சங்கராச்சாரி சொன்னார் என்று ஆத்திரப்படுவது அடிக்கிறவனை விட்டுவிட்டு அடிப்பேன் என்று சொல்லுபவனைக் குற்றம் கூறும் அறிவற்றத் தன்மையேயாகும். மாண்புமிகு மத்திய அமைச்சர் ஜகஜீவன்ராம் அவர்கள் ஏதாவது ஒரு பொது இடத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாவிட்டால் அவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கே புக வேண்டும். அரசினரும் வருவார்கள் என்று கூறியிருக்கிறார்.

இதைப் பார்ப்பன மித்தினான - பார்ப்பனரேயான சுதேசமித்திரன் எடுத்து எழுதிக் கண்டித்து இருக்கிறது. ஜகஜீவன்ராம் அவர்கள் பொது இடத்தில் என்று தான் குறிப்பிட்டாரே ஒழிய பார்ப்பனர் வீட்டிற்குள் என்று சொல்லவில்லை. பொது இடத்தில் யாரும் பிரவேசிக்கலாம் என்று அரசமைப்புச் சட்டத்தில் எரிமை அளிக்கப்பட்டிருக்கிறது யாராவது தடுத்தால் அது சட்ட விரோதம் - தடுப்பது தண்டனைக்கு உரியதாகும் என்றும் சட்டம் கூறுகிறது.

இந்நிலையில் ஜகஜீவன்ராம் அவர்களது பேச்சு சு. மி க்கு எப்படி விருப்பத்தகாததாகும் - வேதனையும் கலக்கமும் கொடுக்கக் கூடியதாகும் என்பது நமக்கு விளங்கவில்லை. இதிலிருந்து சு.மி. பார்ப்பனர் பூரி சங்கராச்சாரிக்கு மேல் ஒரு பத்துப்படி ஏறிக்கூப்பாடு போடுகிறது என்று தான் கூற வேண்டி இருக்கிறது.

சங்கராச்சாரி சொன்னது பெரிதும் அரசமைப்புச் சட்டப்படிக்கு ஆன சொற்களாகும். ஆனால் சு.மி பார்ப்பனர் சொல்வது சட்டத்திற்கு விரோதமான தப்பிலித் தன்மையான பேச்சாகும். பொது இடங்களில் தீண்டாமை இல்லை பொது இடங்களில் தீண்டாமை பாவிப்பது சட்ட விரோதமாகும். தண்டனைக்குரியதாகும் என்று சட்டம் கூறுகிறது.

பார்ப்பான் தான் ஜாதி உரிமையைக் காப்பாற்றிக் கொள்ள எந்தப் பஞ்சமா பாதமான காரியத்தையும் செய்யலாம் என்ற மனுதருமம் - இராஜாஜி தருமம் ஆகியவற்றை அனுசரித்த காரியமுமேயாகும். மற்றும் சு.மி பார்ப்பனர் மாண்புமிகு ஜகஜீவன்ராம் அவர்களை மாத்திரம் காயவில்லை, மாண்புமிகு சத்திய வாணிமுத்து அம்மையாரையும் காய்ந்து இருக்கிறார். அதாவது அந்த அம்மையார் தீண்டாமையைப் பின்பற்றுவோர் மீது போலீசார் வழக்குத் தொடர வேண்டும் என்று சொன்னது நிம்மதியைக் குலைப்பதாகும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

தீண்டாமையை அனுஸ்டிப்பவனைத் தடுப்பதற்கு - அனுஸ்டிப்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் பார்ப்பானுககு மர்திரம் ஏன் நோப்பாளம் வர வேண்டும்? இதிலிருந்தே பார்ப்பனருக்கு இன்னமும் ஜாதிப்புத்தி போகவில்லை என்று தானே அர்த்தம்? மாணபுமிக்கவர்களான ஜகஜீவன்ராம் - சத்தியவாணிமுத்து அம்மையார் இருவரும் சட்டத்தைத்தான் எடுத்துக்காட்டி சட்டப்படி நடவுங்கள் என்று தான் கூறி இருக்கிறார்களே ஒழிய அதிக்கிரதமாய் அவர்கள் என்ன கூறினார்கள்?

இதைப் பொறுக்கவில்லையானால் இதன் பலன் என்ன ஆகும்? அப்புறம் பார்ப்பானுக்குதான் பாதுகாப்புத் தேட வேண்டும். இந்த நிலை ஏற்பட்டால் அணில் தன் வாயால் கெட்டது, என்பது பேர் பார்ப்பனர்கள் தானே தங்கள் கேட்டிற்கு வகை தேடிக் கொள்ளுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தேசியக் கொடியைக் கிழித்தெறிதேசியப் பாடலை பாடவிடாதேகாந்தி நிலையை அழி என்பன போன்ற சட்ட விரோதமான செய்கைகளை விடவா நமது சுயமரியாதைக்குக்கேடான பார்ப்பானை எங்கு கண்டாலும் விரட்டு விரட்டு என்பது பெரிய சட்ட விரோதமாகி விடும்? அவற்றைவிட இதற்கு அதிகத் தண்டனை கிடைக்குமா?

---------01-04-1969 "விடுதலை" இதழில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்

No comments: