Tuesday, March 22, 2011

வைகோவின் அரசியல் பாதை எப்படி அமைய வேண்டும்?

சகோதரர் வைகோவுக்கு தமிழர் தலைவர் திறந்த மடல்

ஆரிய மாயை உங்களை வஞ்சம் தீர்த்துவிட்டது
துணிந்து முடிவு எடுங்கள் தி.மு.க. உறவுதான் கொள்கை ரீதியானது!

வைகோ அவர்களையும், அவர் பொதுச் செயலாளராக இருக்கக் கூடிய ம.தி.மு.க.வையும் அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அம்மையார் அவமதித்து, வஞ்சம் தீர்த்த நிலையில், வைகோ அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதிய திறந்த மடல் இதோ:

அன்புள்ள ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் சகோதரர் மானமிகு வைகோ அவர்களுக்கும், அவரது கட்சியின் சகோதரர்களுக்கும் உங்கள் தாய்க் கழகத்தின் தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் தொண்டர்களுக்குத் தொண்டன் மிகுந்த பாசத்துடன் எழுதும் உரிமை வேண்டுகோள் இது.

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தங்கள் கட்சியை தொகுதிப் பங்கீடு என்ற ஒரு சாக்கைப் பயன்படுத்தி, திட்டமிட்டே வெளியேற்றியது கண்டு - தங்களுக்கும், தங்களை நம்பி தொடர்ந்து பின்பற்றும் உடன்பிறப்புகளுக்கும் ஏற்பட்டுள்ள அவமரியாதை கண்டு எங்கள் மனம் வேதனைப்படுகிறது.

தான் ஆடாவிட்டாலும்...

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடக்கூடிய அளவுக்கு கொள்கை லட்சிய முறையில் தந்தை பெரியார் என்ற மூல வேரிலிருந்து கிளைத்தவர்கள் அல்லவா நாம் அனைவரும்?

தங்களுக்குத் தொகுதிகளைக் குறைத்துக் கொடுத்ததைவிடக் கொடுமை, தங்களை (தங்கள் என்று சொல்லும்போது உங்களுடன் உள்ள உடன்பிறப்பு, தோழர்களையும் இணைத்தே சொல்வ தாகக் கொள்ள வேண்டுகிறோம்) அக்கூட்டணி யிலிருந்து அவமானப்படுத்தி, அதன் மூலம் ஆத்திரம் கொப்பளிக்க தாங்கள் இரவெல்லாம் பேசி முடிவு எடுக்க வைத்ததன் ஆரிய மாயை பற்றி எம்மைப் போன்ற - அவரை அணுஅணுவாக உணர்ந்தவர் களுக்கு இதில் வியப்போ, அதிர்ச்சியோ ஏற்பட வில்லை. இது தங்களுக்கு என்றோ ஒரு நாள் நடைபெறும் என்பதை எதிர்பார்த்தவர்கள் நாங்கள் - விரும்பியவர்கள் அல்லர்.

வெளியிலிருந்து முதலாளித்துவ சக்திகள் தங்களை வெளியேற்ற எவ்வளவு முழு முயற்சி எடுத் துக் கொண்டுள்ளன என்கிற செய்திதான் மேலும் ஓர் அதிர்ச்சியாக உள்ளது!
வஞ்சத்தைத் தீர்த்த அக்ரகாரம்

கடந்த காலத்தில் அந்த அம்மையாரோடு தாங்கள் ஒத்துப்போன முறை - அவர்கள் கட்சிக்காரர்கள்கூட அந்த அளவுக்குச் செய்திருக்க மாட்டார்கள் என்ற அளவு பேசப்பட்ட ஒன்று.

திருமங்கலத்தில் உங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மறைந்ததால் ஏற்பட்ட இடைத் தேர்தலில், அந்த அம்மையார் தன் கட்சிக்குக் கேட்டு வாங்கி, தான் ஏதோ வெற்றியின் முகப்பில் உள்ளதாக ஒரு படம் காட்டச் செய்த முயற்சிக்கு நீங்கள் ஒத்துழைப்புத் தந்ததோடு, தமிழக சட்டமன்றத்திலும் - அ.தி.மு.க.வோடு இணைந்தே இடைத் தேர்தல் புறக்கணிப்பு, சட்டமன்ற வெளிநடப்பு போன்றவற்றிலும் ஒன்றிய நிலையிலேயே செயல்பட்டீர்கள்!

என்றாலும் ஆரியம் தனது வஞ்சகத்தைத் தங்கள் மீது சமயம் பார்த்துக் காட்டி, தங்களை அழித்துவிட தனது அஸ்திரத்தை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

ஜெயலலிதாவின் கடிதம் எத்தகையது!

தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அந்த அம்மையார் வற்புறுத்தும் கடிதமாக அவர் எழுதிய கடிதத்தின் வாசகங்கள் அமையாது, தங்களுக்கு நிரந்தர வழியனுப்பு உபசாரப் பத்திர மாகவே காட்சி அளிப்பது - அவாளின் இயல்பின் இலக்கணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

அவரிடம் உள்ள அகந்தை, ஆணவம், தன் முனைப்பு இவைபற்றிக் கூறியிருக்கிறீர்கள். இது ஒன்றும் தோண்டித் துருவிக் கண்டுபிடிக்க வேண் டியதல்ல. அவரிடம் கூட்டுச் சேர்ந்திருந்த பா.ஜ.க. தலைவர்கள், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியினர் முதலிய பலரும் ஏற்கெனவே பட்டு அனுபவித்து அறிந்த செய்தியாகும்.

சோ - குருமூர்த்தி - ஜெயலலிதா - இனம் இனத்தோடு!

அவரது தற்போதைய ஆலோசகர் சோ. இராமசாமி அய்யர்களும், சுப்ரமணிய சுவாமி அய்யர்களும்தான் - அதன் இனம் இனத்தோடு என்ற உண்மைக்கேற்ப,

இவர்கள் இருவருக்கும், அம்மையாருக்கும் தங்கள் கட்சி நிலைப்பாட்டில் - குறிப்பாக ஈழத் தமிழர் பிரச்சினையில் எந்த சிந்தனைப் போக்கு என்பது உலகறிந்த உண்மையல்லவா?

தங்களுக்கு அம்மையார் ஆட்சியில் இழைக்கப்பட்ட பொடா கொடுமையை தாங்கள் அரசியல் காரண மாக மறந்திருக்கலாம்; ஆனால் இன உணர்வு, நியாய உணர்வோடு நாங்கள் என்றும் மறந்ததில்லை - சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பதும் இயல்பானதே!

எண்ணெய்யும் நீரும் கலப்பது இயல்பானதல்ல; நீரும் நீரும் கலப்பதே இயல்பு என்னும் உண்மையை அறியாததல்ல!

வைகோவின் அரசியல் பாதை எப்படி அமைய வேண்டும்?

அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை நாங்கள் சும்மா இருப்போம் என்கிற நிலைப்பாடு சரியாக அமையுமா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். என்றைக்கிருந்தாலும் நாம் ஒரே வேரிலிருந்து கிளைத்தவர்கள் என்பதால் தாங்கள் தங்களது கட்சியின் எதிர்காலத்தைப்பற்றி சற்று உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா?

சுயமரியாதை உணர்வோடு தீர்மானம் நிறை வேற்றியுள்ளீர்கள்; என்றாலும், மேலும் தங்கள் அரசியல் பாதை எப்படி அமைந்தால் சிறப்பானதாக அமையும் என்பதற்கு தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூடச் சொல்ல மாட்டேன்; தனி அரசியல் கட்சியானாலும் தி.மு.க. என்ற தங்களின் தாய்க் கழகத்தின் கொள்கை, லட்சியங்களில்தான் அதிகமான ஒத்துப் போகின்ற தன்மைகள் பளிச்சிடும் நிலை உண்டு. அதை யொட்டி தாங்கள் 2004இல் நாடாளுமன்றத் தேர்தலில் கடுமையாகப் பிரச்சாரம் செய்தீர்கள். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்றவற்றைப் பற்றி வற்புறுத் தினீர்கள்.

- இவைபோன்ற பல்வேறு பிரச்சினைகளில் நெருக்கமாக இருக்கும் ஒரே அரசியல் கட்சி, தி.மு.க. வாகவும் - அதன் தலைவர் கலைஞருமாகத்தான் இருப்பார்கள். ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் நீரடித்து நீர் விலகாது என்னும் பழமொழிக்கொப்ப, நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க லட்சிய ரீதியான உணர்வு படைத்தவர்கள்.

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப் பாட்டினை எடுங்கள். எனவே, நிதானமாக யோசியுங்கள். துணிந்து ஒரு நிலைப்பாட்டினைத் தோழர்களோடு கலந்து எடுங்கள். ஆட்சிக்கு வருமுன்னரே இப்படித் தங்களை அலட்சியப்படுத்திய ஜெயலலிதா, தப்பித் தவறி வந்தால் எப்படி விஸ்வரூபம் எடுத்து அழிக்க முற்படக் கூடும் என்பதையும் எண்ணுங்கள்.

தி.மு.க.தான் கொள்கை ரீதியாக உடன்படும் கட்சி!

தேர்தலில் மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வருவது கொள்கை ரீதியாக நமக்குத் தேவையானது. உரிமையுடன் அவரிடம் ஈழப் பிரச்சினை உள்பட அனைத்துக்கும் வற்புறுத்தி வாதாடலாம், செயல்பட வைக்கலாம்.

வேகாத வெயிலையும் பொருட்படுத்தாது, பல மணி நேரம் நீதிமன்றங்களில் வந்து காத்திருந்த தலைவர் கலைஞர் அவர்கள் - தங்களை அம்மையார் பொடாவில் போட்டு வதைத்தபோது!

அது மட்டுமல்ல; அண்மையில்கூட அவரது ஆட்சியில் கைது செய்த நிர்ப்பந்த நிலை ஏற்பட்ட போதுகூட, தங்களை சிறையில் வைத்திருப்பதை விரும்பாது, மனிதநேயத்தோடு அரசு வழக்குரை ஞருக்கே சொல்லி, மறுப்புச் சொல்லாதீர்கள் என்று கூறிய மனித நேயத்தைக் கொட்டியவர் நமது கலைஞர். தங்களுக்குரிய மரியாதையை இந்த அணியில் எப்போதும் நீங்கள்பெற முடியும்.

உள்நோக்கமற்ற வேண்டுகோள்

நாம் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்பதால் நம் தமிழினம் உலகம் முழுவதும் உரிமைக் களத்தினில் வெற்றி பெற உதவிடும். இது வெறும் அரசியல் வியூகம் அல்ல - நல்லெண்ணத்தோடும், கவலையோடும் ஒரு சகோதரரின் அறிவுப்பூர்வமான வேண்டுகோள். எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களைக் கருதியோ அல்ல - இந்த வேண்டுகோள்.

மனதிற்பட்டது - தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை.

பகுத்தறிவாளர்களாகிய நாம் தொலைநோக்குப் பார்வையோடும் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதால்தான் இந்த வேண்டுகோள். சிந்திக்க, செயலாற்றுக!

-------------கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் -"விடுதலை” 22-3-2011

8 comments:

புரட்சியாளர் பெரியார் said...

திரும்பிப் பாருங்கள் ஜெயலலிதாவை!


- மின்சாரம் -

தமிழ்நாட்டில் 14ஆவது சட்டப் பேரவைத் தேர்தல்.

அனேகமாக இரு அணிகள்; ஓர் அணி தி.மு.க. தலைமையில், இரண்டா வது அணி அ.இ.அ.தி.மு.க. தலைமையில்.

தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள அணியினைச் சேர்ந்தவர்கள் கொள்கை உடன்பாடு உடையவர்கள்.

ஆனால் அ.இ.அ.தி.மு.க.வில் உள்ள வர்கள் கொள்கையில் முரண்பாடு உடையவர்கள்.

இடதுசாரிகளைப் பொறுத்தவரை மாநில அளவில் முடிவு எடுக்க முடியாத வர்கள். தேசிய கட்சி என்ற நிலையில் டில்லியில் அவர்களின் அகில இந்தியத் தலைமை அசைக்கும் கொடிகளின் அசைவுகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட்டவர்கள்.

அதற்கேற்ப சொல் ஜாலங்களைத் தயாராக வைத்துக் கொண்டு இருப்ப வர்கள். காங்கிரஸ் எதிர்ப்பு என்ற தன்மை யில் ஜெயலலிதாவோடு கூட்டுச் சேர்ந்திருக்கிறோம் என்று இடதுசாரிகள் சொல்வார்களேயானால் அதிலும் அழுத்தம் இல்லை.

காங்கிரசோடு கூட்டணிக்கு முயன்று தோற்ற நிலையில் தான் இவர்களோடு கூட்டுச் சேர்ந்துள் ளார் ஜெயலலிதா என்பது நினைவிருக் கட்டும். அந்த வகையிலும் ஜெயலலிதா சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவரல்லர்.

ஒரே ஒரு கேள்வியை மக்கள்முன் வைத்தால் அ.இ.அ.தி.மு.க. தலைமையி லான கூட்டணி மக்களைச் சந்திக்க முடி யாமல் போக நேரிடும்.

அதுதான் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமாகும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற உரத்த குரல் நீண்ட காலமாகத் தமிழ் மண்ணில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் அ.இ.அ.தி.மு.க.வேகூட 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அழுத்திக் கூறியிருந்தது. இன்றைக்கு இராமன் பாலம் - _ அதனை இடிக்கலாமா என்று கூறி உச்சநீதிமன் றத்திற்குப் படையெடுத்திருக்கும் இதே ஜெயலலிதா அம்மையார் 2001 தேர்தல் அறிக்கையில் அது இராமன் பாலம் அல்ல -_ மணல் திட்டுதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது (அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை பக்கம் 83, 84).

இந்தத் திட்டம் வந்தால் தென் மாவட்டங்களில் பொருளாதார வளர்ச் சியில் புதிய திருப்பம் ஏற்படும். ஆயிரக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிட்டும் என்று அதிமுகவுடன் இன்று கூட்டுச் சேர்ந்திருக்கும் அத்தனைக் கட்சிகளும் கிளிப் பிள்ளைப் பாடம் போல தமிழ்நாட்டு மக்களிடத்தில் ஒப்புவித்து வந்திருக்கின்றனர்.

அ.இ.அ.தி.மு.க. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் வண்ணம் நீதிமன்றம் சென்றுள்ளதே -_ இதுகுறித்து இடதுசாரிகளோ, ம.திமு.க. வோ மூச்சு விட்டதுண்டா?

இந்தத் தேர்தலில் இதுபற்றிய தங்கள் கருத்தினைக் கூறாமல் தவிர்த்திடத் திட்டமிட்டுள்ளார்களா?

எப்படி அவர்கள் வியூகம் வகுத்திருந் தாலும் தென் மாநில மக்கள் மத்தியில் செங்குத்தாக எழுந்து நிற்கும் இந்தக் கேள்வி அணுக்குண்டுக்குப் பதில் சொல் லியே தீரவேண்டியவர்கள் ஆவார்கள்.

தி.மு.க.வும் அதில் இடம் பெற்றி ருக்கும் கட்சி. கண்டிப்பாக இந்த ஒரே ஒரு பிரச்சினையின் அடிப்படையிலேயே கூட அ.தி.மு.க. அணியினரைச் சிதறடித்து விட முடியும்.

மக்கள் பிரச்சினைக்காகத் தேர்தலா -_ மக்கள் பிரச்சினைக்கு முகமூடி போட்டுவிட்டு, யாரோ ஒரு சிலர் பதவிப் பல்லக்கில் மிதக்க வேண்டும் என்பதற்காகத் தேர்தலா?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் கூடாது என்று ஜெயலலிதா சுப்பிரமணியசாமியோடு சேர்ந்து கொண்டு உச்சநீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கில் சில முக்கியப் பிரச்சினைகள் உண்டு.

ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது - _ அது மத நம்பிக்கையாளர்களின் மனதைப் புண்படுத்தக் கூடியது என்பது ஜெயலலிதா தரப்பில் கூறப்படுவதாகும்.

சேது சமுத்திரத் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் பொருளாதார வளம் என்பது ஒருபுறம் இருக்கட்டும்; இரண்டாவதாக இராமன் பிரச்சினையைக் கொண்டு வந்து திணித்துள்ளாரே - _ இவர்களின் அணித்தலைவர் _ இது இடதுசாரிகள் ஏற்றுக் கொண்டிருக்கும் மதச் சார்பின்மையின்மீது தொடுத்துள்ள மரணத் தாக்குதல் அல்லவா?

அரசு துறையில் மேற்கொள்ளப்படும். பொருளாதார வளர்ச்சி தொடர்பான பிரச்சினை ஒன்று; இன்னொன்று மதச் சார்பின்மை என்னும் மகத்தான கொள்கை. இந்த இரண்டிலும் முரண் பாடான முரட்டுத்தனமான கொள்கையை உடையவர்தான் இடதுசாரிகள் இணைந் திருக்கும் கூட்டணிக்குத் தலைவரா?

கூட்டணி என்றால் அவற்றையெல் லாம் பார்க்கக் கூடாது; ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு _ அப்படிப் பார்த்தால் எந்தக் கட்சியும் இன்னொரு கட்சியுடன் கூட்டுச் சேர முடியாது என்கிற பொதுவான - சாமர்த் தியமான நழுவல் இங்கு பொருந்தாது.

பா.ஜ.க.வுடன் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் இடதுசாரிகள் பா.ஜ.க.வுடன் தேர்தலுக்காகக் கூட்டணி வைத்துக் கொள்ளுமா?

புரட்சியாளர் பெரியார் said...

சோசலிசம், மதச் சார்பின்மை என்பனவற்றைப் பின்னுக்குத் தள்ளி விட்டு இடதுசாரிகள் கூட்டணி வைத்துக் கொள்வார்களா?

கூட்டணியில்லாத நேரத்தில் ஒரு கட்சி இன்னொரு கட்சிபற்றி பேசிய சொல் லாடல்கள், விமர்சனங்கள் மாறுபட்டுப் போகலாம்.

ஆனால் அடிப்படையிலேயே முரண்பாடு கொண்ட கட்சிகள் கூட்டுச் சேர்வது _ தங்களையும் ஏமாற்றிக் கொள்வது. மக்களையும் ஏமாற்றிட முயற்சி செய்வது ஆகாதா?

அயோத்தியில் கரசேவையை ஆதரித்தவர், இராமன் கோயிலை இந்தியாவில் எழுப்பாமல் வேறு எங்கு எழுப்புவது என்று கேள்வி கேட்டவர்; சிறுபான்மை மக்களை நர வேட்டையாடிய நரேந்திர மோடிக்குச் சிவப்புக் கம்பளம் கொடுத்து வரவேற்று விதவிதமான வகைகளில் எல்லாம் விருந்து படைத்தவர் _ உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று வருணிக்கப்பட்ட மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் பறந்து சென்றவர் - _ மதச் சார்பின்மைக்கு விரோதியல்லவா?

அ.இ.அ.தி.மு.க.வுடன் முஸ்லிம் அமைப்பும் சேர்ந்ததுதான் வேடிக்கை வினோதம்.

இன்றைக்கு மனிதநேய மக்கள் கட்சி என்ற அரசியல் ஆடை உடுத்தியிருக்கும் த.மு.மு.க. தான் சென்னைக் கடற்கரையில் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தியது (4.7.1999). அதற்கு முஸ்லிம்கள் வாழ்வுரிமை மாநாடு என்னும் பெயர்.

அம்மாநாட்டில் முத்தாய்ப்பாக ஜெயலலிதா என்ன பேசினார்?

இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் ஓர் உத்தரவாதம் தருகிறேன்.

நான் முன்பு ஒரு தவறு செய்து விட்டேன். நான் செய்த தவறை ஒப்புக் கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு உண்டு. அந்தத் தவறுக்குப் பரிகாரமாகத் தான் பி.ஜே.பி. ஆட்சியை நானே கவிழ்த்தேன்.

இனி ஒருபோதும் அ.இ.அ.தி.மு.க., பி.ஜே.பி.யுடன் தொடர்பே வைத்துக் கொள்ளாது. என்றென்றும் கடைசி வரைக்கும் _ இஸ்லாமிய சமுதாய மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பேன். உற்ற தோழியாக, உங்கள் சகோதரியாக இருப்பேன். உங்கள் கஷ்ட நஷ்டங்களில் பங்கு கொள்வேன். உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இருப்பேன்!

என்று சூளுரைத்தாரே. லட்சோப லட்ச இஸ்லாமியர்கள் முன் வாக்குறுதி அளித்தாரே _ அதனைக் காப்பாற்றினாரா ஜெயலலிதா? அடுத்த தேர்தலிலேயே பா.ஜ.க.வோடு சேர்ந்து கொண்டாரே!

அப்படிப்பட்ட ஜெயலலிதாவோடு -_ அந்தத் த.மு.மு.க. இன்றைய மனிதநேய மக்கள் கட்சி கூட்டு சேர்கிறது என்றால், இதற்குள்ளிருப்பது பதவி வேட்கையோ, வேட்டையோ தவிர சமுதாயப் பாது காப்புக் கிடையாது.

சந்தர்ப்பவாதத்தோடு அ.இ.அ.தி.மு.க .வோடு கூட்டு சேர்ந்து வரும் கட்சி களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் பாடம் போதிக்கட்டும்!

சாதனைகளை முன்வைத்து நெஞ்சு நிமிர்த்தி வரும் மதச் சார்பற்ற தி.மு.க. அணிக்கு வெற்றி மாலையைச் சூட்டட்டும்!- “விடுதலை” 20-3-2011

புரட்சியாளர் பெரியார் said...

கூட்டணி பற்றி தி.மு.க. முடிவெடுப்பது அவர்களுடைய உரிமை

கேள்வி: தி.மு.க. கூட்டணியில் காங் கிரஸ் இடம் பெறத் தேவையில்லை. சுயமரி யாதைக்கு இழுக்கு என்று முன்பு அறிக்கை மூலம் சொன்னீர்களே, இப்பொழுது என்ன நிலை?தமிழர் தலைவர்: காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கேட்டு தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுத்தது. எனவே கூட்டணி யில் காங்கிரஸ் இடம் பெறத் தேவையில்லை என்று தாய்க்கழகத்தின் சார்பில் நாங்கள் கூறினோம். தி.மு.க. சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு முடிவெடுப்பது அது அவர்களுடைய உரிமை, கடமை. சரியோ, தவறோ கூட்டணி அரசியல்தான் என்ற நிலை வந்தாகி விட்டது.அதாவது கூட்டணி அரசியல் முறையே மாற்றப்பட வேண்டும். எடுத்தவுடனேயே கூட்டணி அமைக்கக் கூடாது. தேர்தலில் அவரவர்கள் தனித்து நின்று அவரவர் களுடைய பலத்தைக் காட்ட வேண்டும்.பிறகு ஆட்சி அமைக்க கூட்டு தேவை என்றால் அவர்கள் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். சென்ற தேர்தலில்கூட தி.மு.க. அணியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொகுதி உடன்பாடு செய்து கொண்டிருந் தனர்.தேர்தல் முடிந்துவிட்டது. நாங்கள் தொகுதி உடன்பாடு மட்டும்தான் செய்து கொண்டோம். இப்பொழுது விலகிவிட் டோம் என்று அவர்களே சொன்னார்கள். இப்பொழுது வேறு அணிக்காக நின்று கொண்டிருக்கின்றார்கள்.கட்சி மாறுவதிலே கூட சரியான நிலை இல்லையே. இதுவரை கட்சி மாறியவர்கள் எவர் மீதாவது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிந்ததா? இல்லையே.தேர்தல் கூட்டணி என்றால் Common Minimum Programme வைத்து அதை கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக் கொண்டு அதற்குப் பிறகு தொகுதி உடன்பாடு செய்து கொண்டு கூட்டணி அமைப்பது தான் நல்லது. அப்படிப்பட்ட முறைதான் சிறந்தது.
(செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் அளித்த பதில் - சென்னை - பெரியார் திடல் - 14.3.2011).


பிராமண சங்கத்தின் ஆதரவு அ.தி.மு.க.வுக்காம்


தமிழர்களே, உங்கள் கடமை என்ன?தமிழ்நாடு வாக்காளப் பெருமக்களே,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 13-4-2011 அன்று நடைபெற விருக்கும் நிலையில் உண்மையான போட்டி1. கலைஞர் தலைமையில் உள்ள தி.மு.க.கூட்டணிக்கும்2. ஜெயலலிதா தலைமையில் உள்ள அ.தி.மு.க. கூட்டணிக்கும்தான் என்பது உலகறிந்த செய்தியாகும்!இதில் தமிழ்நாடு பிராமண சங்கம் கோவையில் கூடி ஜெயலலிதா கூட்டணிக்கே தங்கள் ஆதரவு என்று தெளிவாக, எவ்விதக் குழப்பமும் இன்றி, இனம் இனத்தோடு என்பதற்கொப்ப திட்டவட்டமாக தீர்மானம் போட்டு அறிவித்துவிட்டார்கள்.இதோ நேற்றைய (பார்ப்பன) இனமலர்தான் என்பதை மார்தட்டிக் கூறும் வகையில் பார்ப்பன நாளேடு தினமலர் (15-3-2011) 15-ஆம் பக்கத்தில் உள்ள செய்தி இதோ: வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத் தலைவர் ஸ்ரீராமன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், 13ஆம் தேதி கோவையில் நடந்தது. மாநில தலைவர் சேலம் ஆடிட்டர் ஸ்ரீராமன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட தலைவர் விஜயன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என்றும், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டளிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. நிறுவனத் தலைவர் வெங் கட்ரமணன் பேசினார். தமிழகத்தின், 24 மாவட்டங்களில் இருந்து, 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப் பினர்கள் கலந்துகொண்டனர். மாநில பொருளாளர் ஆலங்குடி வெங்கட்ராமன் நன்றி கூறினார்.(தினமலர், 15.3.2011, பக்கம் 15)இந்நிலையில், சூத்திர, பஞ்சம மக்களுக்காகவே உள்ள ஆட்சியான கலைஞர் ஆட்சியை ஆதரிக்கவேண்டியது உண்மைத் தமிழர்களின் உயிரினும் மேலான கடமை அல்லவா?ஆயிரம் ஊழல் குற்றச்சாற்று, வழக்குகள் எல்லாம் அவாளிடம் இருந்தபோதிலும், ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பார்ப்பன ஏடுகள், ஊடகங்கள் எப்படியெல்லாம் தூக்கிப் பிடிக்கின்றன பார்த்தீர்களா?இதே அளவு இன உணர்வு, மான உணர்வு நமக்கும் வேண்டாமா?தமிழர்களே, திராவிடர்களே, இன உணர்வாளர்களே, சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!தி.மு.க. கூட்டணி வெற்றி, திராவிடர் தம் கொள்கை லட்சியங்களின் வெற்றி!மறவாதீர்! மறவாதீர்!! 16-3-2011

புரட்சியாளர் பெரியார் said...

தமிழின வாக்காளர்களுக்கு திராவிடர் கழகப் பொதுக்குழு வேண்டுகோள்


எல்லார்க்கும் எல்லாம் என்ற சாதனைகள்மிகு சமதர்ம தி.மு.க. ஆட்சி மீண்டும் நிலைபெற தி.மு.க. அணிக்கே ஆதரவு தாரீர்!மனுதர்மம் அரியணை ஏற இடம் தராதீர்!


எல்லார்க்கும் எல்லாம் என்ற கொள்கையில் சாதனைகள் நிகழ்த்திக் காட்டிய, தி.மு.க. ஆட்சியே மீண்டும் தமிழ்நாட்டில் நிலைபெற, தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கே ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், பல்வேறு ஒப்பனைகளுடன் வரும் மனுதர்மத்தை அரியணையில் அமர்த்த இடம் கொடுக்கக் கூடாது என்றும், தமிழின வாக்காளர் பெருமக்களுக்கு திராவிடர் கழகப் பொதுக் குழு வேண்டுகோள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

புரட்சியாளர் பெரியார் said...

தீர்மானம் எண் 1: இரங்கல் தீர்மானம் தீர்மானம் எண் 2: நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் திராவிடர் கழகத்தின் முடிவுவரும் ஏப்ரல் 13 (2011) அன்று நடைபெறவிருக்கும் 14ஆவது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - நமது இயக்கத்தையும், திராவிடர் சமுதாயத்தையும் பொறுத்த வரை வெறும் அரசியல் ரீதியான ஒரு ஜனநாயக நிகழ்வு மட்டுமல்ல; அதைவிட ஆழமாகவும் தொலைநோக்குடனும் பார்க்க வேண்டிய முக்கியமான சமுதாயப் போராட்டத் தின் வடிவமாகும்.பரம்பரை யுத்தம் என்று சென்ற சட்டமன்றத் தேர்தலின்போதே இதே எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் குறிப்பிட்டார்.இப்போது நமது வாக்காளர்கள்முன் உள்ள பிரச் சினை - பல்வேறு ஒப்பனைகளுடன் வரும் மனு தர்மத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதா அல்லதுபெரியார் - அண்ணா கண்ட திராவிடர் இயக்க, சுயமரியாதை இயக்க இலக்கு நோக்கிய சமதர்ம ஆட்சியாக - அனைவருக்கும் அனைத்தும் என்ற அடிப்படையில், அய்ந்தாம் முறையாக பொற்கால ஆட்சியாக தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கலைஞர் தலைமையிலான சூத்திர - பஞ்சம, மனிதத் தர்ம ஆட்சியை மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர்த்தி, நடைபெற்ற சரித்திர சாதனைகளைத் தொடரச் செய்வதா என்பதேயாகும்!ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு - இவற்றை உள்ளடக்கிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற சட்டத்தை இயற்றி, பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட முயற்சிகளைச் செய்தும், நீசபாஷை என்று இழிவுபடுத்தப்பட்ட நம் தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்து, தமிழ் மானம் காத்தும், தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளே என்று பிரகடனப்படுத்தியும், புதியதோர் தமிழ் இன மறுமலர்ச்சியை ஏற்படுத்தியும், தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளே என்று பிரகடனப்படுத்தி, புதியதோர் தமிழ் இன மறுமலர்ச்சியை ஏற்படுத்தியும், பண்பாட்டுப் பாதுகாப்புக்கு வழி செய்த துணிச்சல் மிகுந்த ஆட்சியாகும் மானமிகு கலைஞர் ஆட்சி.மக்கள் தொகையில் சரி பகுதியான மகளிர் நலம் காக்க, பெண்களுக்கான சுய உதவிக் குழுக்களை உருவாக்கிப் பெருக்கி, அவர்களுக்குச் சொந்த கால் பலத்தை ஏற்படுத்தி, சொத்துரிமை முதல் பதவி உரிமை வரை பலவற்றையும் தந்து, அவர்களுக்கு திருமண உதவி, மறுமண உதவி, கருவில் வளரும் குழந்தைகள் நலத்தையும்கூடப் பாதுகாத்தும், அனாதைகளான விதவைகளுக்கு உதவித் தொகை, திருநங்கையர்களாம் அரவாணி களுக்குத் தனிவாரியம், மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு மற்றும் பல்வேறு வசதி - இவைகளைச் செய்து வரலாறு படைத்துள்ள ஆட்சி என்ற சாதனைகளோடு தேர்தலை தி.மு.க. சந்திக்கிறது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், படிக்கக் கல்வி, நோய் போக்க உதவியாக மருத்துவமனைகள், வேலை வாய்ப்புகள், கடனற்ற நிம்மதி - இவை உள்ள வாழ்க்கை யினைத் தருவதுதானே நல்லாட்சியின் அடை யாளங்கள்? அவை அத்தனையும் மக்களைச் சென்றடையும் வண்ணம் நாளும் திட்டம் தீட்டி செயல்படுத்திட்ட ஆட்சி திமுக ஆட்சிதானே! ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு, மலிவு விலையில் மளிகைப் பொருள்கள் 50 ரூபாய்க்கு; (காய்கறிகளும்கூட அவசியப்படும்போது அரசே மலிவு விலையில் உழவர் சந்தைகள் மூலம்) வழங்கிப் பசிப்பிணி போக்கியதோடு, நோயற்ற வாழ்வு வாழ வருமுன்னர் காக்கும் திட்டம் முதல், வந்தாலும் உடன் காக்கும் கலைஞர் உயிர் காக்கும் திட்டம் வரை, 108 எண் ஆம்புலன்ஸ் வண்டிகள் ஓடோடி வரும் மருத்துவ வசதிகள் ஏழை - எளிய மக்களுக்கு கிடைத்திடும் திட்டங்கள் எல்லாம் இனிய கொடைகளாகும். கல்விப் புரட்சியோ, கிராமங்கள், நகரங்கள் போன்ற வேறுபாடு இன்றி, ஆரம்பப் பள்ளியில் தொடங்கி, தொழிற் கல்வி, பொறியியல், மருத்துவக் கல்லூரிகளை மாவட்டந்தோறும் அரசுத் துறையில் ஏற்படுத்திய வரலாறும், நுழைவு தேர்வினை ரத்து செய்தும் முதல் தலைமுறை யினருக்கு சாதி, மத, பால் வேற்றுமை பாராது படித்து முன்னேற இலவசப் படிப்பு வசதிகள் - எண்ணற்ற பல்கலைக் கழகங்கள்-ஓட்டைக் குடிசைகளில் வாழ்ந்த மக்களுக்கு 21 லட்சம் குடிசைகள் இல்லா கான்கிரீட் வீடுகளை கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அறிவித்து, 3 லட்ச வீடுகளில் ஏற்கெனவே எம்மக்கள் குடியேறி வாழ்கின்ற வாய்ப்புக்களை அளித்த ஆட்சி தி.மு.க. ஆட்சி.சொன்னதையெல்லாம் செய்து சொல்லாத தையும் செய்து, சாதனை மேல் சாதனைகள் அடுக்கியுள்ள ஆட்சி - மக்கள் நலன் கருதித் தொடர வேண்டாமா? என்பதை வாக்காளர்கள் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.

புரட்சியாளர் பெரியார் said...

ரூபாய் 7000 கோடி விவசாயிகள் கடன் தள்ளுபடி, பயிர்ப் பாதுகாப்பு, அசலை முறையாக செலுத்துப வர்களுக்கு கூட்டுறவுக் கடன் வட்டி தள்ளுபடி என்று அறிவித்து, ஏழைகள் நெஞ்சில் பால் வார்த்த ஆட்சி. பட்டினியின்றி, எலிக்கறியைத் தின்னாதவர்களாக ஆக்கி, வரலாறு படைத்த மனிதநேய ஆட்சி திமுக ஆட்சி, தொழிற்சாலை பெருக்கம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள்; வேலைகிட்டாதாருக்கு உதவித் தொகை - இவ்வளவும் இங்கு சாதனைகள். 1 லட்சத்து 70 ஆயிரம் ஊழியர்களை ஒரே கையெழுத்தில் வீட்டிற்கு அனுப்பி, நள்ளிரவில் சிறை பிடித்த ஆட்சியல்ல திமுக ஆட்சி. ஆறாவது சம்பளக் கமிஷன் கூடுதல் ஊதியத்தையும் தந்து, அரசு ஊழியர்களை உயர்த்திட்ட ஆட்சி! எந்தத்தரப்பிலும் போராட்டம் அரும்பும் போதே அழைத்துப் பேசி, தீர்வு காணும் ஜனநாயக நெறியில் நடைபோடும் ஆட்சியாகவே கடந்த 5 ஆண்டு காலம் சரித்திரம் படைத்துள்ளது! தொழிலாளர் நல வாரியம் உட்பட எத்தனை எத்தனை வாரியங்கள்!எல்லார்க்கும் எல்லாமும் என்ற சமதர்மத் தத்துவ அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ திமுகவின் ஆட்சியால் பலன் அடைந்தவர்களேயாவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆரிய ஊடகங்கள், ஏடுகளின் பழி தூற்றல்கள், பொய்யுரைப் பரப்பல்கள், நடக்காதவைகளை ஊழல் குற்றச்சாற்றுகளாக்கிக் காட்டுதல் - இவைகளையும் மீறி, முகிலைக் கிழித்து வரும் முழு மதி போல கலைஞர் ஆட்சி மீண்டும் மலரப் போவது உறுதியாகும்! இவ்வளவு சாதனைகளைச் செய்த ஓர் கட்சிக்கு, ஆட்சிக்கு எதிராக ஆரியம் வரிந்து கட்டி நிற்கிறது - 1971இல் செய்ததைப் போல அவதூறுகளை அள்ளி வீசுகின்றது. எனவே, திராவிடப் பெருங்குடி மக்கள், ஏமாந்து விடாமல் - யார் வரக்கூடாது என்பதை முதலில் தெளிவாக உணர வேண்டும் - யார் வர வேண்டும் என்பதற்குரிய காரணங்கள் எண்ணற்றவை என்ற போதிலும் கூட.தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுவதுபோல, தன்மானத்தைப் பலி கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங் களும்கூட பொதுவாழ்வில் ஏற்படும். இனமான வேட்கையின்முன் தன்மானம் வெகுச் சாதாரணமானது என்பது அறிவுப் பூர்வமாக சிந்திப்பவர்களுக்குத் தெள்ளத் தெளிய விளங்கும்! ஒரு போரில் நமது வியூகம், நம் எதிரி வகுக்கும் வியூகம் - உபாயத்தைப் பொறுத்தே அமையும். நாம் எந்த ஆயுதத்தை எப்படி எப்போது எடுப்பது என்பதை நம் எதிரிதான் தீர்மானிக்க வைக்கிறான் என்ற மூதுரை - நமக்கு சரியான நிலைப்பாடு எடுக்க உதவுகிறது. இந்த நிலையில், 1971 தேர்தலைப் போன்றதுதான் வரும் 14ஆவது தமிழகச் சட்டப் பேரவைக்கான தேர்தலும். தமிழர்கள் திமுக தலைமையில் உள்ள கூட்டணியையே வெற்றி வாகை சூடச் செய்வதன் மூலம் மகத்தான திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு தமிழினப் பெரு மக்களைக் கேட்டுக் கொள்கிறது.வரும் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, கொங்கு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந் தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளை ஆதரித்து, வெற்றி பெறச் செய்யும் ஜனநாயகக் கடமையாற்றிட வாரீர் வாரீர் என்று திராவிடர் கழகப் பொதுக் குழு தமிழினப் பெரு மக்களுக்குக் கடமையுடன் கூடிய அன்பழைப்பை விடுக்கிறது.வெற்றி நமதே!

புரட்சியாளர் பெரியார் said...

தாய்க்குலமே, தயார்தானா?

- மின்சாரம் -
ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யப் போகிறார்கள்.அனேகமாக தமிழ்நாட்டில் இரு கூட் டணிகளில் ஒன்று தி.மு.க., தலைமை யிலானது. இன்னொன்று அ.இ.அ.தி.மு.க. தலைமையிலானது. இன்னும் முற்றிலுமாகக் கூட்டணிகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.திமுக தலைமையிலான அணி உருவாக்கப்பட்டு வேட்பா
ளர்கள் நேர்காணலும் நடக்கத் தொடங்கி விட்டது.
கடந்த தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை கதாநாயகனாகக் கம்பீரமாக உலா வந்தது.இந்த முறை அதே தேர்தல் அறிக்கை இன்னொரு பரிமானத்தில் பல்லக்கில் வரப் போகிறது.தேர்தல் நேரத்தில் தேர்தல் அறிக்கை வழியாக நாங்கள் தமிழ்நாட்டு மக்கள் முன் வைத்த உறுதிமொழிகளை இதோ நூறு சதவிகிதம் நிறைவேற்றிக் கொடுத் திருக்கிறோம்.உங்கள் பொன்னான வாக்குகளை எங்களுக்குத் தாருங்கள் என்று நெஞ்சு நிமிர்த்தி வாக்காளர்களை நோக்கிப் பெருமிதத்துடன் அறிவு நாணயத்துடன் அடி எடுத்து வைக்கிறது ஆளும் தி.மு.க.பெண்களுக்கென்றே அடுக்கடுக்கான சாதனைகள்! தமிழ்நாட்டுப் பெண் தலைவர்கள் அன்னை நாகம்மையாரில் ஆரம்பித்து, மூதாட்டி மூவாலூர் இராமா மிர்தம் அம்மையார், அன்னை தரு மாம்பாள், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, அன்னை மணியம்மையார், அஞ் சுகத்தம்மையார், டாக்டர் சத்தியவாணி முத்து என்ற பெரும் அணி வகுப்பு!தமிழ்நாட்டுப் பொது வாழ்வில் மின்னும் இந்த அன்னைமார்கள் பெயரில் பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை வளர்ச்சித் திட்டங்கள்!இந்தியாவிலேயே சுய உதவிக் குழுக் கள் என்றால் அது தமிழ்நாட்டில்தான் - _ அதுவும் தி.மு.க. ஆட்சியில்தான் ஜொலிக்கிறது.29 லட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள்.4 லட்சத்து 28 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி.20 இலட்சத்து 75 ஆயிரம் கர்ப்பிணிப் பெண்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி!திருநங்கைகள் (அரவாணிகள்) என்பவர்களுக்காகத் தனி வாரியம் உலகிலேயே தமிழ்நாட்டில்தான்!நியாயமாகப் பார்க்கப் போனால் தமிழ்நாட்டுப் பெண் வாக்காளர்கள் நடக்க இருக்கும் தேர்தலை தங்களுக்கான தேர்தலாகத் தலையில் சுமந்து வீதிக்கு வர வேண்டும்.அருமை அம்மா,அருமை அக்கா,அருமைத் தங்காய்!நமக்கென்றே நடைபெறும் கலைஞர் ஆட்சியின் சாதனைகளால் நேர்முக மாகவும், மறைமுகமாகவும் அதிக பலன் பெற்றவர்கள் நாம், நாம், நாம்! பலன் பெற் றவர்கள் பெண்கள், பெண்கள், பெண்கள்!நம் பிள்ளைகள் பள்ளிக்குச் சென்று சத்துணவை உண்டு வாரத்துக்கு மூன்று முட்டைகளையும் சாப்பிட்டு நோயற்ற பிள்ளைகளாகத் துள்ளி விளையாடு கிறார்களே! அந்தக் கண் கொள்ளாக் காட்சிக்கு கைம்மாறு என்ன?21 லட்சம் கான்கிரீட் வீடுகள் என்றால் சாதாரணமா? ஆண்களைவிட பெண் களாகிய நமக்குத்தானே இதில் பெரும் -- லாபம் _ வசதி!வீட்டை ஆளுவது நாம்தானே! நமக்குத்தானே அதன் அருமை தெரியும் - _ அவசியமும் புரியும்!ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்றாலும், 50 ரூபாய்க்கு முக்கிய மளிகை சாமான்கள் என்றாலும், இதிலும் நம் முடைய சுமையைக் குறைக்கும் சூட்சமம் தான் இருக்கிறது என்பதை மறந்து விடலாமா?ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பதும்தான் எத்துணைப் புரட்சி!பசியால் நம் பிள்ளைகள் சுருண்டு கிடந்தபோது நம் வயிறு எப்படியெல் லாம் பற்றி எரிந்தது -_ ஒரு காலத்தில்!இன்று அந்த நிலைமை உண்டா? தமிழ்நாட்டில் பட்டினிச் சாவு என்ற பேச்சு உண்டா?ஆயிரம் மாற்றங்கள் வந்தாலும் வீட்டுப் பராமரிப்பும், பிள்ளைகள் பராமரிப்பும் இன்னும் நம்மைச் சார்ந்து தானே இருக்கிறது!இதற்கு முன்புகூட ஒரு தாய்க்குலம் ஆட்சிப் பீடத்தில் இருந்ததே -_ பெண் களின் சுமையை அது இறக்கி வைத்த துண்டா?திருத்துறைப்பூண்டியிலே பட்டினியால் ஒரு குழந்தை இறந் தது என்று கம்யூனிஸ்ட் தலைவர் குற்றப் பத்திரிகை படித்தபோது அந்த அம்மணி திருவாய் மலர்ந்தாரே நினைவிருக்கிறதா? (அந்தக் கம்யூனிஸ்ட் தலைவருக் கும்தான் இப்பொழுது நினைவில் இருக்குமா!)பட்டினியால்தான் அந்தக் குழந்தை செத்துப் போனது என் பது உண்மையானால், அதே வீட்டில் இன்னும் இரு குழந்தை கள் இருக்கின்றனவே அவை ஏன் சாகாமல் இருக்கின்றன என்று துடுக்காகக் கேட்ட அந்தப் புண்ணியவதி மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரலாமா? அமர விடலாமா?வேட்டி கட்டிய தாயாக அல்லவா கலைஞர் இருக்கிறார்! அதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

புரட்சியாளர் பெரியார் said...

13லட்சத்து 54 ஆயிரம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 240 கோடி ரூபாய் உதவியை அள்ளி வழங்கினாரே இந்த மனுஷன். நினைத்துப் பார்க்க வேண்டாமா? இந்த உதவி பெற்ற பிள்ளைகள் எல்லாம் மிட்டா மிராசு வீட்டுப் பிள்ளைகளா? நாம் பெற்ற பிள்ளைகள் அல்லவா?பிள்ளைகளைப் பெற்ற மகராசிகளான நமக்கல்லவா இதன் அருமை பெருமை தெரியும். கிராமத்துப் பிள்ளைகளுக்குப் படிப்பில் சலுகைகள்; நம் வீட்டுப் பிள் ளைகள்கூட என்ஜினீயராக வருவார்கள் என்று எந்தக் காலத்தில் நாம் கனவு கண்டோம் _ நினைத்துதான் பார்த்தோம்?அதோ வாரான் பாரு, நம்ம பிள்ளை -_ பேண்டு சர்ட்டுப் போட்டுக்கிட்டு, மிலிட் டரிக்காரன் மாதிரி பூட்சு போட்டுக்கிட்டு புள்ள போறான் பாரு! பூரிக்குதே பெற்ற வயிறு!அந்தப் புண்ணியவான் மறுபடியும் ஆட்சியில் அமர்ந்து நம் வயிற்றில் எல்லாம் பால் வார்க்க வேண்டாமா?நமக்கு எப்பதான் வேலையில்லை. இந்த ஒரு மாசத்துக்கு நேரத்தை எப்படியாவது ஒதுக்கி தாய்மார்களே, நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?வீட்டுக்கு வீடு போவோம்; கதை பேச அல்ல; தாய்க் குலத்துக்கு கலைஞர் அரசு செய்திருக்கிற சாதனைகளை எடுத்துச் சொல்லிச் சொல்லி, கிளிப்பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது போல திருப்பித் திருப்பி மனப்பாடம் செய்ய வைத்து, உதயசூரியன் ஜெகஜோதியாக சுடர் விட நாம் உழைக்க வேண்டாமா?வீட்டில் கிளி வளர்த்தால் அதற்குக் கூட சொல்லிக் கொடுக்க வேணும்.சூரியன், சூரியன் என்று சொல்லு மாறு பயிற்சி கொடுக்க வேணும்.இதற்கு முன்னால் ஏதோ தேர்தல் அன் னைக்குப் போய் ஓட்டுப் போட்டு வந்ததோடு நம் கதை முடிஞ்சுது. இந்தத் தடவை நாம் அப்படியெல்லாம் இருக்கக் கூடாது தங்கச்சி! நமக்கான ஆட்சியை நாமதானே கொண்டாருன்னும்? நன்றி என்பதுதான் மிக முக்கியம். நன்றியைப் பற்றிப் பெண் களுக்குச் சொல்லிக் கொடுக்கணுமா?வெறும் வாய் வார்த்தையில் அல்ல!தேர்தல் அன்னைக்கு வாக்குச் சாவ டிக்குத் தவறாமல் போயி உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டுப் போட்டு, நம்மக் கடமையைச் செய்தால்தான் நமது மனசு ஆறும்! இந்த ஒரு மாசத்துக்கு வேறு பேச்செல்லாம் வேண்டாம்; வேண்டவே வேண்டாம்!இந்த முறை தமிழ்நாட்டுத் தேர்தல் மிக வித்தியாசமாக இருந்தது _ பெண்களே அணிவகுத்துப் புறப் பட்டார்கள்; எங்கு பார்த்தாலும் அவர்களின் கைகளில்தான் பதாகைகள்!பெரிய புரட்சியையே நடத்திக் காட்டி விட்டார்கள் என்று ஊரும் சொல்லனும்; உலகமும் மெச்சனும்.வெற்றியை நிர்ணயித்தவர் தமிழ்நாட்டின் தாய்க்குலமே என்ற சரித்திரத்தைப் படைப்போம்! தாய்க்குலமே, தயார்தானா? 12-3-201