Saturday, September 13, 2008

நாடிஜோதிடத்தின் முறைகேடுகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

நாடிஜோதிடத்தின் முறைகேடுகளை
எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு


மோசடி பற்றி தமிழாராய்ச்சி பேராசிரியர் வாக்குமூலம்

சீர்காழி, செப். 12- வைத்தீசுவரன் கோயில் பகுதியில் நாடி ஜோதி டத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ள தமிழாராய்ச்சிப் பேரா சிரியர் பரபரப்பான வாக்கு மூலம் ஒன்றை அளித்துள்ளார்.

சீர்காழி வட்டம் திருக் கோலக்கா தெருவைச் சேர்ந்த பண்டரிநாதனின் மகன் கோபாலகிருஷ்ணன் கடந்த 21-9-2008 அன்று வைத்தீசுவரன் கோயிலில் உள்ள சிவசாமி நாடிஜோதிட நிலையத்துக்குச் சென்று நாடிஜோதிடம் பார்த் துள்ளார். அப்போது முன் னுக்குப் பின் முரணான சேதிகளை ஜோதிடம் கூறி யுள்ளார். திருமணமாகாத கோபாலகிருஷ்ணனுக்குத் திருமணம் ஆகிவிட்டது என் றும், உயிரோடு உள்ள அம் மாவை இறந்து விட்ர் என் றும், வேளாண்மைத் தொழில் செய்து வருபவரை மின் வாரியத்தில் பணிபுரிபவர் என் றும், பத்தாம் வகுப்பு படித்த வரைப் பட்டப்படிப்பு படித் துள்ளார் என்றும் கூறியுள் ளார். இதனால் ஆத்திரம டைந்த கோபாலகிருஷ்ணன் 2003 ஆம் ஆண்டில 35 வயதில் இறந்து போன தனது உறவினர் செங்குட்டுவனுக்கு நாடி ஜோதிடம் பார்த்துள்ளார். அப்போது அவர் 75 வயது வரை நலமோடும் வளமோடும் வாழ்வார் என ஜோதிடர் கூறியுள்ளார்.

இந்த முறைகேடுகள் குறித்து வழக்குரைஞர் சோம சுந்தரம் என்பவர் மூலம் சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கோபால கிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நேற்று நடைபெற் றது. ஓலைச்சுவடிகள் பற்றி சாட்சியம் அளித்த சென்னை யைச் சேர்ந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் மகாலட்சுமி நீதி மன்றத்தில் அளித்த விளக்கமாவது:

ஓலைச்சுவடி என்பது பாடல் களை மனப்பாடம் செய்து பின்னர் அதனை ஓலைச்சுவடி களில் எழுதினர். களவியல் உரை 9 தலைமுறைகளாக மனப்பாடம் செய்த பின்னர் தான் ஓலைச்சுவடிகளில் எழு தப்பட்டது. ஆயிரக்கணக்கான பாடல்களை மனப்பாடம் செய்து கொண்டு ஏதோ ஒரு ஓலைச்சுவடியைப் படிப்பது போல் நாடிஜோதிடம் பார்க் கின்றனர். மாணிக்கவாசகர் அம்மானே என்ற இலக்கியப் புத்தகங்களை வைத்துக் கொண்டு பாடல்கள் பாடிக் கொண்டு ஜோதிடம் பார்க் கின்றனர். இவர்களே ஓலைச் சுவடிகளை உருவாக்கிக் கொள்கின்றனர். ஓலைச் சுவடி களில் எழுதும்போது ஏடு மட்டுமே நகரும். கை நகராது. நாடிஜோதிடத்தில் உள்ள ஓலைச்சுவடியில் உள்ள எழுத்து வடிவத்தைப் பற்றி ஓலைச்சுவடியை நன்கு அறிந்த வர்கள் கூடப் படிக்க இயல வில்லை. ஒரு சில எழுத்துக் களைக் கொண்டு இவர்களே திட்டமிட்டு ஓலைச்சுவடி களை உருவாக்குகின்றனர்.

இவ்வாறு பேராசிரியர் வாக்குமூலம் அளித்தார்.

நீதிபதி இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

No comments: