Thursday, August 28, 2008

நடைபாதையில் இருந்த கோயில் இடிப்பு






சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில், அரசு பொது மருத்துவமனை நுழைவு வாயில் அருகே நடைபாதை யில் உள்ள அரசமரத்தடியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் 2 ஆண்டுகளாக இருந் தது. இந்த கோயிலில் எப் போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்பவர்களும், சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் இருந்து சுரங்கப் பாதை யில் இறங்கி வருபவர்களும் நடைபாதையில் உள்ள கோயிலில் கூடி இருக்கும் பக்தர் களின் நெருக்கடியில் சிக்கித் தவித்தனர். இந்நிலையில், நடை பாதையில் உள்ள கோயில்களை அகற்றும்படி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

அதன்படி காலை சைதாப் பேட்டை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் கோயிலை அகற்றும் பணியில் ஈடுபட் டனர். இதற்காக வரவழைக்கப் பட்டிருந்த ஜேசிபி இயந்திரம் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனை அருகே இருந்த கோயில் அகற்றப்பட்டு, லாரி யில் தூக்கி செல்லப்பட்டது. இதனால் சிறிது நேரம் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூக்கடை உதவி கமிஷனர் பாலச்சந்திரன் தலைமையில் போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே, அரசு பொது மருத்துவ மனையின் மதில் சுவரையொட்டி நடைபாதையில் மேல் மலை யனூர் அங்காளம்மன் கோயில் இருந்தது. நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அந்தக் கோயிலை இடித்துத் தள்ளினர்.


-------------- நன்றி: "விடுதலை" 27-8-08

No comments: