Saturday, March 26, 2011

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் தலைவர் கி.வீரமணி

மீண்டும் ஆடு மாடுகளை மேய்க்கப் போக வேண்டுமா?


அ.இ.அ.தி.மு.க, தேர்தல் அறிக்கையிலே சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகள் என்ன? வீட்டுக்கு வீடு நான்கு ஆடுகளைக் கொடுப்போம் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.

ஆடு, மாடுகளை மேய்த்துக் கிடந்த நம் மக்களுக்குக் கல்வியைக் கொடுக்கச் செய்து, உத்தியோகங்கள் கொடுக்கச் செய்து கரை ஏறச் செய்தவர் தந்தை பெரியார். கல்விக் கண் கொடுத்தவர் பச்சைத் தமிழர் காமராசர் - அறிஞர் அண்ணாவும், மானமிகு கலைஞர் அவர்களும் அடித்தட்டு மக்களை மேலே கொண்டு வரப் பாடுபட்டார்கள்.

ஆனால் ஜெயலலிதா அம்மையாரோ மீண்டும் நம் மக்களை ஆடு மாடுகள் மேய்க்கப் போகச் சொல்லுகிறார்.

மீண்டும் மனுதர்மம் கோலோச்ச வழி செய்கிறார்.

இன்று மனுதர்மத்துக்கும் சமதர்மத்துக்கும்தான் போராட்டம்! சமதர்மம் விரும்புவோர் கலைஞர் தலைமையிலான ஆட்சியைக் கொண்டு வர வேண்டாமா?

(சென்னைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில்
தமிழர் தலைவர் கி. வீரமணி
- 25.3.2011
******************

தேர்வில் காப்பி அடித்தால் - தண்டனை! தேர்தலில் காப்பி அடித்தால் என்ன தண்டனை?


இப்பொழுது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்துகொண்டு இருக்கிறது. திடீரென்று பறக்கும் படையினர் தேர்வு எழுதும் மய்யத்திற்கு வந்து பார்வையிடுகிறார்கள். தேர்வில் யாராவது மாணவர்கள் காப்பி அடித்தால் கையும், களவுமாகப் பிடித்து அய்ந்தாண்டுகள் வரை தேர்வு எழுத முடியாது என்று தண்டிக்கின்றனர் - இது தேர்வில்.

இப்பொழுது தேர்தலில் காப்பி அடிக்கிறார்களே! தி.மு.க. தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. அப்படியே காப்பி அடித்துள்ளதே - இதற்கு என்ன தண்டனை?

சம்பந்தா சம்பந்தம் இல்லாத பிரச்சினைகளில் எல்லாம் தலையிடும் தேர்வாணையம் இதுபோல காப்பி அடிப்பவர்கள் விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? (பலத்த கை தட்டல் - சிரிப்பு!). தேர்வில் 5 ஆண்டு தண்டனை என்றால் தேர்தலிலும், தேர்தலில் நிற்கக் கூடாது என்று தண்டனை கொடுக்கலாமே!

(சென்னைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில்
தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்
- 25.3.2011)

***********************

கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் நிற்கவில்லை; தியாகப் பீடத்தின் மீது நிற்கிறார்!


மு.க.ஸ்டாலினை ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம்

சென்னை, மார்ச் 26- தி.மு.க. பொருளாளர், துணை முதல்வர் ஸ்டாலின் கொளத்தூரில் நிற்கவில்லை; தியாகத்தின் மீது நிற்கிறார் என்று அவரைப் பாராட்டி கொளத்தூர் தொகுதி மக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தி.மு.க. பொருளாளர், தமிழக அரசின் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று (25.3.2011) இரவு 7 மணிக்கு கொளத்தூர் தொகுதியைச் சார்ந்த பெரம்பூர் செம்பியம் காந்தி சிலை அருகில் ராகவன் தெருவில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:

ஸ்டாலினை தென்கோடியில் அழைத்தார்கள்

கொள்கைக்கு முதலிடம், லட்சியத்திற்கு முதலிடம் என்ற பார்வையோடுதான் தளபதி ஸ்டாலின் அவர்கள் - நல்ல வாய்ப்பாக அவர் போட்டியிடக்கூடிய புதிதாக உருவாக்கப்பட்டி ருக்கின்ற இந்தக் கொளத்தூர் தொகுதிக்கு கிடைத்திருக்கிறதென்றால், அது நீங்கள் பெற்ற பேறு.

தளபதி ஸ்டாலின் அவர்களை தேர்தலில் நிற்க வைக்க தென்கோடியில் அழைத்தார்கள். பாளையங் கோட்டைத் தோழர்கள்கூட, நீங்கள் இங்கே வந்து நில்லுங்கள் என்று அழைத்தார்கள்.

பாளையங்கோட்டைத் தோழர்களுக்கும், வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் சகோதரர் வி.எஸ். பாபு அவர்களுக்கும் ஏற்பட்ட போட்டியிலே எப்பொழுதும் வெல்லக்கூடிய பாபு இப்பொழுதும் வென்றார்; எப்போதும் வெல்வார் (கைதட்டல்).

பதவிக்கான இயக்கமல்ல

தி.மு.க. வெறும் பதவிக்காக இருக்கிற இயக்கமல்ல. கொள்கைப் பார்வை இருக்கிறது. இந்த இயக்கம் அறிஞர் அண்ணா அவர்களாலே தொடங்கப்பட்ட நேரத்திலே நேற்றுக்கூட தஞ்சையிலே நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் பேசியிருக்கிறார். இது வெறும் பதவிக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல.

தளபதி அவர்களை அழைத்து நீங்கள் இந்தத் தொகுதியில் நில்லுங்கள். நீங்கள் நின்றால் அதைவிட வேறு பெருமை எங்களுக்குக் கிடையாது என்று சொல்லி, தான் பக்குவப்படுத்தப்பட்டிருக்கின்ற இந்தத் தொகுதியை அவர்களை வலியச் சென்று அழைத்து கொளத்தூர் தொகுதி பெருமைபெற வேண்டும் என்று நினைத்து செய்கிறார்கள் என்று சொன்னால் இப்படிப்பட்ட தியாக உணர்வு யாருக்கு இருக்கும்?

சுயநல மனிதர்களுக்கு இருக்காது

சுயநல மனிதர்களுக்கு இருக்காது. பதவியை மட்டுமே நினைப்பவர்களுக்கு இருக்காது. இதனால் தனக்குப் பெருமை என்று கருதி அமைதியாக பணியை செய்து கொண்டிருக்கின்றார் வி.எஸ்.பாபு. அதற்குப் பெயர்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

அதுதான் தி.மு.க!

அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டனுடைய உணர்வு. அதுதான் கழகம் ஒரு குடும்பம் என்று சொல்லுகின்ற அளவுக்கு உண்மையான ஒரு பொருளாகும்.

234 தொகுதிகளிலும் கலைஞர்தான் வேட்பாளர்!

யார் வேட்பாளர் என்பது முக்கியமல்ல. நான் சொன்னேன். 234 தொகுதியிலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர்தான் வேட்பாளர். அதில் சந்தேகமில்லை. தமிழக மக்கள் இதிலே தெளிவாக இருக்கிறார்கள்.

இந்தக் கொளத்தூர் தொகுதியிலே மற்றவர் களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது.

தளபதி ஸ்டாலின் தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம். அவரை எல்லோரும் விரும்பியிருக்கிறார்கள் - ஏற்றிருக்கிறார்கள். எந்தத் தரப்பும் தளபதி ஸ்டாலின் அவர்களைக் குறை சொன்னதே கிடையாது.

காரணம் அவர் எல்லோரிடத்திலும் மிக அன்பாக எளிய முறையிலே பழகக் கூடியவர்.

லாட்டரியால் பதவிக்கு வந்தவர் அல்ல!

அவர் ஏதோ திடீரென்று அரசியலுக்கு வந்தவர் அல்ல. அவர் ஒன்றும் வரும் பொழுதே லாட்டரிச் சீட்டு வாங்கிக் கொண்டு வந்தவர் அல்ல.

நான் தளபதி ஸ்டாலின் அவர்களைப் பற்றி பேசும் பொழுது நான் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுகிறேன், ஏன்? காரணம் என்ன?

1976இல் நெருக்கடி காலத்தில் நாங்கள் எல்லாம் சிறைச் சாலையில் 9ஆவது வார்டு அறையில் தள்ளப்பட்டு அதுவும் தொழு நோயாளிகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட சாதாரணமான வசதி குறைவாக இருக்கக்கூடிய இடத்திலே அடைத்து வைக்கப்பட்டோம்.

சிறைக் கதவுகளைத் திறந்து சட்ட விரோதமாக, எங்களை அடித்தார்கள். அந்த அடியினால் ரத்தம் சொட்டச் சொட்ட வாங்கிக் கொண்டிருந்தோம்.

இரத்தம் சொட்டச் சொட்ட ஓர் இளைஞர்

சற்று நேரம் கழிந்த பிற்பாடு, ஓர் இளைஞர் அடி வாங்கி இரத்தம் சொட்டச் சொட்ட என்மீதுதான் விழுந்தார். எனக்கு அது பெருமையாக இருக்கிறது. அன்றைக்கே அவர் மனப் பக்குவத்தோடு இருந்தார். தம்பி நாங்கள் எல்லாம் இந்தச் சிறைக் கொடுமைக்கு அனுபவப்பட்டவர்கள்.

ஆனால் நீங்கள் அந்த அனுபவத்தை முதல் முறையாகப் பெறுகிறீர்களே என்று சொன்ன பொழுது, இல்லை அண்ணே! நான் பக்குவமாக இதை ஏற்றுக் கொள்ளக்கூடிய தெம்பு உண்டு என்று சொன்னார்.

தியாகத் தழும்பு

அன்றைக்கு அவருடைய தியாகத் தழும்பு இருக்கிறதே அந்தத் தியாகத்தின் மீதுதான் இந்த மேடையின் மீது அவர் நிற்கிறார்.

அதை மறந்து விடாதீர்கள்- அப்படிப்பட்ட ஒருவர் வேட்பாளராக வந்திருக்கின்றார். எனவே அவர் தியாகத்தின் மீது நிற்கிறார்.

என்னுடைய தளபதி நிற்பதுதான் பெருமை என்று பாபு சொன்னாரே-அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கத்தில்தான் விட்டுக் கொடுக்கின்ற தன்மை இருக்கிறது.
விட்டுக் கொடுப்பவர்கள்

பேரறிஞர் அண்ணா சொன்னார்-விட்டுக் கொடுப்பவர்கள், கெட்டுப்போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை-என்று.

தளபதி ஸ்டாலின் தொகுதியில் பேச வேண்டு மென்று நானே ஆசைப்பட்டேன். ஆகவே வந்திருக்கிறேன்.

மீண்டும் கலைஞர் ஆட்சி!

நாங்கள் எல்லாம் பேசி ஓட்டுக் கேட்டால்தான் நீங்கள் ஓட்டுப் போடுகிறவர்கள் அல்லர். நீங்கள் ஏற்கெனவே முடிவு செய்விட்டீர்கள். இங்கு மட்டுமல்ல, தமிழகத்திலே இருக்கின்ற அத்தனை மக்களும் முடிவு செய்துவிட்டார்கள்.

காரணம், கலைஞர் தலைமை தாங்கினால்தான் மீண்டும் கலைஞர் ஆட்சி மலர்ந்தால்தான். திராவிடம் எழுச்சி பெறும் என்பதை உணர்ந் திருக்கிறார்கள். மனுதர்மம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. சமதர்மம் மலரவேண்டும். ஆரியம் அதனுடைய பொல்லாச் சிறகை விரிக்கக் கூடாது. மீண்டும் திராவிடம் எழுச்சி பெறவேண்டும் என்ற உணர்வோடு மக்கள் வந்திருக்கிறார்கள்.

1971இல் ஊடகங்கள் தி.மு.க.வுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தன. அப்பொழுதுதான் என்றைக் கும் இல்லாத அளவுக்கு தி.மு.க. 183 தொகுதிகளில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

மீண்டும் திரும்பப் போவது 1971 முடிவுதான். அதில் யாருக்கும் சந்தேகமில்லை.

சமுதாய புரட்சியின் விடிவெள்ளி

ஏன் தி.மு.க. ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்றால், இதுதான் சமுதாயப் புரட்சிக்கு விடி வெள்ளியாக ஆகும். எனவே அருமை வாக்காளப் பெருமக்களே! அன்புள்ள தோழர்களே! அருமைத் தாய்மார்களே! ஏப்ரல் 13ஆம் தேதியன்று வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள்!

வாக்குச் சாவடியில் தளபதி மு.க.ஸ்டாலின் பெயர் இருக்கும். அதற்கு நேராக உதயசூரியன் சின்னம் இருக்கும். அந்த உதயசூரியன் சின்னத்தில் பொத்தானை அழுத்துங்கள்!

ஒளிமிகுந்த வாழ்க்கை

பொத்தானை அழுத்திய உடனே விளக்கு எரியும். அந்த விளக்கு எரிந்தால் உங்கள் வீட்டில் விளக்கு எரியும். அந்த விளக்கு எரிந்தால் நாட்டில் விளக்கு எரியும். ஒளி மிகுந்த வாழ்க்கையை நீங்கள் பெறக்கூடிய வாய்ப்பைப் பெற முடியும்.

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இவ்வாறு பேசி மேலும் ஏராளமான விளக்கங்களை அளித்தார்.

****************************

பேராசிரியரை ஆதரித்து தமிழர் தலைவர் பிரச்சாரம்


கலைஞர் ஆட்சியில் எல்லா மக்களும்-கட்சியினரும் பயனடைந்தனர் ஜெயலலிதா ஆட்சியில் எலிக்கறிதான் மிஞ்சியது

சென்னை, மார்ச் 26-கலைஞர் ஆட்சியில் பயன் பெறாதவர்களே கிடையாது. எலிக்கறி சாப்பிடுவது நல்லது என்று சொன்ன ஜெயலலிதாவுடன் இடது சாரிகள் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறி, தேர்தல் பிரச்சார உரையாற்றினார்.

தி.மு.க. வேட்பாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களை ஆதரித்து வில்லிவாக்கம் தொகுதி மேடவாக்கத்தில் நேற்று (25.3.2011) திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

இந்தியாவிலேயே ஒப்பற்ற ஆட்சி!

நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள் இந்தியாவில் எங்கும் இல்லாத ஓர் ஒப்பற்ற ஆட்சியை கடந்த 5 ஆண்டுகாலமாக - பொற்கால ஆட்சி என்று அனைவரும் விருப்பு வெறுப்பு இன்றி சொல்லக்கூடிய அளவிற்கு சாதனைகளை சரித்திரத் தில் உருவாக்கி, அன்றாடம் செய்திருக்கின்ற பல நற்பணிகளைக் கொண்ட தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகத்தான் வருகின்ற ஏப்ரல் .13 ஆம் தேதி நடைபெறக்கூடிய தேர்தல் ஆகும். இந்தத் தேர்தலிலே இதுவரை வேறு எந்த மாநிலத்தில் இல்லாத சாதனைகளை தமிழகத்திலே கலைஞர் ஆட்சியிலே நிகழ்த்தியிருக்கின்றார்கள்.

உச்சநீதிமன்றம் பாராட்டு

இதை நாம் பாராட்டுவதைவிட, தோழமைக் கட்சிகள் பாராட்டுவதை விட, இதுவரை வரலாறு காணாத வகையிலே உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் தமிழகத்திலே நடைபெறக்கூடிய பொது விநியோகத் திட்டத்தைப் பாராட்டியிருக்கின்றார்கள். அதாவது பெரும்பாலான மக்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய, உயிரூட்டக் கூடிய திட்டம் - அந்தத் திட்டத்தைப் போல மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று பாராட்டிச் சொன்னார்கள்.

அது மட்டுமல்ல; மத்திய அரசையே உச்சநீதிமன்றம் கேட்டது. ஏன் நீங்களும் அதைப் பின்பற்றக் கூடாது, ஏன் மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றக் கூடாது என்று கேட்டார்கள். இதைவிட பெருமை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு - கலைஞர் ஆட்சிக்கு வேறு சரித்திரம் இருக்க முடியாது.

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குப் போடுகின்ற திட்டம் இதுவரை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? கிடையாது. கம்யூனிஸ்ட்டுகள் ஆளுகின்ற மேற்கு வங்காளத் திலே கிடையாது அதே போல கேரளாவிலே கிடையாது. அண்மையிலேதான் அவர்கள் கஷ்டப்பட்டு ஒரு 40 நாள்களுக்கு முன்னாலேதான் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்குக் கொடுக்கப் படும் என்ற நிலைக்கு சொல்லியிருக்கிறார்கள்.

50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருள்கள்

வெறும் அரிசியை மட்டும் போட்டால் போதுமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் - இந்த அம்மையார் கேட்டார். தாய்மார்களுக்கு, குடும் பத்திலே இருக்கிறவர்களுக்கு வசதியாக 50 ரூபாய்க்கு பத்து மளிகைப் பொருள்களை கலைஞர் ஆட்சியில் இன்றைக்கும் தந்து கொண்டிருக் கின்றார்கள். இப்படி விநியோகம் செய்த முறையைத் தான் உச்சநீதிமன்றத்திலே பாராட்டினார்கள்.

பட்டினிச்சாவு கிடையாது

தமிழ்நாட்டிலே பட்டினிச்சாவு கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டார்கள். இன்றைக்கு அ.தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்திருக்கின்ற கம்யூனிஸ்ட் நண்பர்கள் கூட , பட்டினிச்சாவு நடந்திருக்கிறது.; அதுவும் எங்கே நடந்திருக்கிறதென்றால் சோழவளநாடு சோறுடைத்து என்று சொல்லுகின்ற தஞ்சை மாவட்டத்திலேதான் நடத்திருக்கிறது என்று அந்த அம்மையாரிடம் சுட்டிக்காட்டினார்கள்.

அன்றைக்கு ஆட்சியில் இருந்த அந்த அம்மையார் எலிக்கறி சாப்பிடுவது சர்வ சாதாரணம் என்றெல்லாம் சொன்னார். ஆனால் இன்றைக்கு அந்த அ.தி.மு.க. அணியில் தான் இடது சாரிகள் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சி தொடர உரிமை

தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்று கேட்பதற்கு உரிமை இருக்கிறது. காரணம் நம்முடைய பேராசிரியர் அவர்கள் இந்தத் தொகுதியிலே வேட்பாளராக இருப்பது இந்தத் தொகுதிக்கு கிடைத்த மிகப்பெரிய அரிய வாய்ப்பு. மிகப் பெரிய பெருமை. இந்தத் தொகுதியிலே பேராசிரியர் அவர்களுக்கு பெருவாரியான வாக்களித்து அவரைத் தேர்ந் தெடுக்க வேண்டும். இந்த 5 ஆண்டு காலத்திலே ஒரு முறை கூட வரி போடப்பட்ட பட்ஜெட் கிடை யாது.

வரிபோடப்படாத பட்ஜெட்

வரி போடாத பட்ஜெட் - மக்களுக்கு சுமை இல்லாத பட்ஜெட். நல்ல சமதர்ம ஆட்சி என்றால் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், படிக்கக் கல்வி இவை அத்தனையையும் தரக்கூடிய வாய்ப்பை கலைஞர் அவர்களுடைய தலைமை யிலேயே இருக்கக் கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, தோழமைக் கட்சிகளினுடைய ஒத்துழைப்போடு மிகச்சிறப்பாக நிறைவேற்றி யிருக்கிறார்கள். சொன்னதைச் செய்வோம். செய்வதையே சொல்வோம் என்ற அந்த உணர் வோடு வந்திருக்கின்ற ஆட்சி, சொன்னதை எல்லாம் செய்து முடித்து விட்டு, தேர்தல் அறிக்கையிலே எவை எவை எல்லாம் சொல்லியிருக்கிறார்களோ அதை எல்லாம் செய்து முடித்து விட்டு, சொல்லாத தையும் செய்த பெருமை இந்தியாவிலேயே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்குத்தான் உண்டு - கலைஞர் ஆட்சிக்குத் தான் உண்டு - பேராசிரியர் நிதியமைச்சராக இருந்து வரலாறு படைத்த ஆட்சிக்குத்தான் உண்டு.

அது மட்டுமல்ல எல்லா குடும்பங்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டி; இது முடியுமா? என்று கேட்பார்கள். இன்றைக்கு முடிந்திருக்கிறது. அடுத்து நமது மகளிர் சங்கடப்படக் கூடாது என்பதற்காக ஒரு திட்டம். பெரும்பாலான வீடுகளிலே மகளிர்கள் வேலைக்குச் செல்கிறார்கள் -ஆண்களும் வேலைக்குப் போகிறார்கள். பெண் களும் வேலைக்குப் போகிறார்கள் - படித்திருக்கின்ற காரணத்தாலே.

மிக்சி - கிரைண்டர்

குடும்பத்தில் மாவரைப்பதற்கு சங்கடப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு ஒரு கிரைண்டரோ அல்லது அவசரமாக அரைக்க ஒரு மிக்ஸியோ வழங்கப்படும் என்று இந்தத் தேர்தல் அறிக்கையிலே கலைஞர் அறிவித்திருக்கின்றார். உழைப்பைக் குறைக்க வேண்டும், ஓய்வைப் பெருக்க வேண்டும், தாய்மார்களுக்கு எளிதில் சிறப்பாக முடிய வேண்டும் என்ற தத்துவப்படி மிக்சி அல்லது கிரைண்டர் என்பதை அறிவித்திருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் கலைஞர் அவர்கள் சொன்னது போல முன்பு கதாநாயகன் என்றால் இம்முறை கதா நாயகியான வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதைப் பார்த்து காப்பி அடித்து - இதைக் கூட்டி, அதைப் பெருக்கி - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தனது தேர்தல் அறிக்கையில் மிக்சி, கிரைண்டர், ஃபேன் கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார்.

இலவசத்தால் நாடு அழியுமாம்!

இலவசத்தால் நாடு அழியும் என்று சொன்னவர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கி றார்கள். இலவசத்தால் முடியுமா? என்று கேட்டவர்கள் அங்கு இருக்கின்றார்கள்.

தஞ்சையில் கலைஞர் பேச்சு

நேற்று தஞ்சையிலே நம்முடைய முதல்வர் கலைஞர் பேசும் பொழுது சொன்னார். நான் ஏலம் போடுவதற்காக வரவில்லை. மாறாக இந்த மக்களுக்கு ஏற்றத்தைத் தருவதற்காக ஆட்சி அமைக்க வந்திருக்கிறேன். சமுதாய வளர்ச்சிக்கு இப்படிப்பட்ட திட்டங் களைச் செய்கிறோம்; செய்து வருகிறோம் என்று சொன்னார்கள். கருவறையிலிருந்து கல்லறைவரை யிலே ஒவ்வொரு கட்டத்திற்கும் திட்டங்களை வைத்திருக்கிறார்கள்.

நிதி ஆதாரம் எங்கே?

ஜெயலலிதா அவர்கள் அறிவித்த திட்டங்களை எப்படிச் செய்வார்? அதற்கு நிதி ஆதாரம் என்ன என்பதை அவர்கள் சொல்லவில்லை. இதைப் பற்றியும் அவர்களுக்குக் கவலை இல்லை. மக்கள் மத்தியிலே ஒன்று புரிந்திருக்கிறது-தி.மு.க. சொன்னால் செய்யும்; செய்வதையே சொல்லும் என்று புரிந்திருக்கிறார்கள்.

ஆனால் மற்றவர்கள் சொன்னது கிடையாது. சொன்னதற்கு மாறாகத்தான் செய்தார்கள். அ.தி.மு.க. பொதுச் செயலாளரின் ஆணவம் எந்த அளவுக்கும் மாறவில்லை. என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏப்ரல் 13ஆம் தேதிக்குப் பிறகு ஆறாவது முறையாக அமையப் போவது கலைஞர் ஆட்சிதான் என்பதிலே எந்தவித சந்தேகமும் கிடையாது.

கலைஞர் மீண்டும் பதவிக்கு வரவேண்டும்; பேராசிரியர் மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்ற அவசியத்திற்காக அல்ல. அவர்கள் எத்தனையோ பதவிகளைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இவர்களை விட்டால் இந்தச் சமுதாயம் வாழுமா? இவர்களை விட்டால் நம்முடைய தமிழர்களுக்கு நாதி உண்டா? திராவிட இனம் வளருமா? முன்னேறுமா? அந்தக் கவலை தான் எங்களைப் போன்றவர்களுக்கு.

பயன்பெறாதவர்களே கிடையாது

அருமைத் தாய்மார்களே! அன்புள்ளம் கொண்ட தாய்மார்களே! அனைத்து மக்களுக்கும் வாழ்வு ரிமையை ஏற்படுத்திய ஆட்சி இந்த ஆட்சி. கலைஞ ருடைய ஆட்சியினாலே நேரடியாகவோ, மறைமு கமாகவோ பயன்பெறாதவர்கள் யாரும் கிடையாது. எந்தக் கட்சியும் கிடையாது - எல்லோரும் பயன் பெற்றிருக்கிறார்கள். நன்றி காட்டக் கூடிய வாய்ப்பு என்று கருதி நம்முடைய பேராசிரியர் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்திலே நீங்கள் பொத்தானை அழுத்தினால் வெளிச்சம் தெரியும்; விளக்கு எரியும் அந்த விளக்கு எரிந்தால் உங்கள் வீட்டில் விளக்கு எரியும், நாட்டில் விளக்கு எரியும். வெற்றி திராவிட முன்னேற்றக் கழக அணிக்கே என்று சொல்லி என் உரையை முடிக்கிறேன்.

தமிழர் தலைவரை வரவேற்று
பேராசிரியர் சால்வை அணிவித்து உரை

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை பேராசிரியர் அன்போடு வரவேற்று சால்வை அணிவித்து உரை யாற்றினார். நேற்று வில்லிவாக்கம் தொகுதி மேடவாக்கம், 58ஆம் வட்டம் குட்டியப்பன் தெருவில் தேர்தல் பிரச்சார ஊர்வல புறப்பாட்டின் பொழுது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை வரவேற்று, தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் ஆற்றிய உரை வருமாறு: நாம் வாக்காளர்களைச் சந்திக்கின்ற இந்த ஊர்வலத்தில் உங்கள் அனைவரையும் முதலில் நான் வரவேற்கின்றேன்.

எனது நீண்ட நாள் நண்பர், திராவிடர் கழகத்தினுடைய தலைவர், விடுதலை ஆசிரியர் திரு.வீரமணி அவர்கள் வாக்கு கேட்கின்ற இந்த ஊர்வலத்தைத் துவக்கி வைத்து உரையாற்ற இங்கு வந்திருக்கிறார்கள். அவர்களை நான் உரையாற்று மாறு கேட்டு அவர்களை அன்போடு வரவேற்கின்றேன்.

-இவ்வாறு பேராசிரியர் க.அன்பழகன் உரையாற்றினார்.

(மேடவாக்கம் 25.3.2011)

*************************

மலையைத் தூக்கி என் தோளில் வையுங்கள், பிறகு மாற்றி வைக்கிறேன்!


தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஒன்றைச் சொல்லுகிறது என்றால், அதனைக் கட்டாயம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தி யில் உண்டு.

சொன்னதைச் செய்ததோடு மட்டுமல் லாமல் சொல்லாததையும் செய்த ஆட்சி கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சி யாகும்.

2006 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று அறிவித் திருந்தார் கலைஞர். தேர்தலில் வெற்றி பெற்று, மக்கள் மன்றத் தின்முன் பதவிப் பிர மாணம் எடுத்த அந்த நிகழ்ச்சியிலேயே முதல் உத்தரவாக 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற உத்தரவில் கையொப் பமிட்டவர் கலைஞர் அவர்கள். இது தேர்தலில் சொன்ன வாக்குறுதி-அதனை நிறைவேற்றிக் கொடுத்தார்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப்படவில்லை. அண்ணா நூற்றாண்டு விழாவின்போது முதல மைச்சர் கலைஞர் அதற்கான உத்தரவைப் பிறப் பித்தார். இதனை யாரும் எதிர்பார்க்க வில்லை- யாரும் கேட்கவும் இல்லை. இது தான் செல்லாததையும் செய்த வர் கலைஞர் என்பதற்கு அடையாளம்!

கலைஞர் ஒன்றை அறிவிக்கிறார் என்றால் அதில் நிதானப் போக்கு இருக்கும். சொல்லு கிறோமே-அதனை நிறைவேற்ற முடியுமா? நிதி நிலை ஒத்துழைக்குமா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து வாக்குறுதி அளிக்கிறார். காரணம், அவர் தந்தை பெரி யாரின் மாணவர்.

அதனால்தான் பெண்களின் நலன் கருதி மிக்ஸி அல்லது கிரைண்டர் தரப்படும் என்று கலைஞர் கூறு கிறார். இலவசங்களைச் கேலி செய்து வந்த ஜெயலலிதாவோ மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் மூன்றும் தரப்படும் என்று தி.மு.க.வைக் காப்பியடித்துத் தேர்தல் அறிக்கையிலே குறிப் பிட்டுள்ளார்.

கலைஞர் சொல்லுகிறார் என்றால் மீண் டும் ஆட்சிக்கு வரப்போகிறார், வந்து அந்தப் பொருளை உறுதியாகக் கொடுக்கப் போகிறார். அதனால்தான் பொறுப்பாக, நிதானமாக, நடைமுறை சாத்தியக் கூறுகளை உணர்ந்து வாக்குறுதிகளை அளந்து கொடுக்கிறார்.

இந்த அம்மாவோ ஆட்சிக்கு வரப்போவ தில்லை என்று அவருக்கே தெரியும். அதனால் வாய்க்கு வந்த வாறு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.

தி.மு.க. கூறியுள்ளதை விட அதிகமாகக் கொடுப்பதாக ஜெயலலிதா அறிவித்ததிலி ருந்து ஓர் உண்மை மட்டும் புலப்படுகிறது.

தி.மு.க. சொன்னதைச் செய்துவிடும்- மக்கள் தி.மு.க.வின் நம்பகத்தன்மையை ஒப்புக்கொள்பவர்கள் என்பதை ஜெய லலிதா அறிந்த நிலையில் தான்-அந்த அச்சத்தி னால்தான் தி.மு.க.வைத் தாண்டி வாக்குறுதி களை பொய்யாக வேணும் சொல்லியாக வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது (பலத்த கைத் தட்டல்).

தந்தை பெரியார்தான் பொதுக்கூட் டத்தில் ஒரு கதையைச் சொல்லுவார். இரண்டு ஊர்களுக்கும் இடையில் ஒரு மலை இருந்தது. அந்த மலை இருப்பதன் காரணமாக ஊர் மக்கள் அடுத்த ஊருக்குச் செல்லு வதற்கு வெகுதூரம் நடந்து செல்ல வேண்டி யிருந்தது.

அப்பொழுது ஒரு வழிபோக்குச் சாமியார் அங்கு வந்த சேர்ந்தார். இரண்டு ஊர் மக்க ளையும் கூட்டி, இந்த மலை இரண்டு ஊர்க ளுக்கும் நடுவே இருப்பதால்தானே வெகு தூரம் நடந்துச்செல்லுகிறீர்கள்?

இந்த மலையை அப்புறப்படுத்திவிட்டால், உங்களின் வெகுநாள் கஷ்டம் நீங்கிவிடும் அல்லவா? என்றார் சாமியார்.

இரு ஊர் மக்களும் இப்படி ஓர் ஏற்பாட் டைச் செய்வதற்கு இது வரை யாரும் முன் வர வில்லையே- இவர் பெருஞ்சக்திவாய்ந்த மகான் போல் இருக்கிறது என்று பயபக்தி யுடன், இதற்கொரு வழி சொல்லுங்கள்! என்று கெஞ்சிக் கேட் டனர்.

சொல்லுகிறேன் கேளுங்கள்- இந்த மலையைத் தூக்கி வேறு இடத்தில் வைக்கும் வேலையை என்னிடம் விட்டு விடுங்கள். ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள். அதுவரை இரு ஊர்க்காரர்களும் எனக்கு நல்ல அளவு விருந்தளித்து என் உடல் வலி மையைப் பெருக்கிகொள்ள உதவிட வேண் டும் என்று சாமியார் சொன்னார்.

இரு ஊர் மக்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, போட்டி போட்டுக்கொண்டு சாமியாரை உபசரித்தார்கள்-விருந்து படைத் தார்கள்.

30 நாள்கள் ஓடி விட்டன. சாமியார் மலை யைப் புரட்டப்போகிறார், வேறு இடத்தில் வைக்கப் போகிறார் என்று நம்பி மகிழ்ச்சி யுடன் இரு ஊர் மக்களும் கூடினார்கள்.

எல்லோரும் வந்து விட்டீர்களா? என்று சாமியார் கேட்டுவிட்டு மலையைத் தூக்க ஆயத்தமானார். மக்கள் பரபரப்பாகக் காணப் பட்டனர்.

அப்பொழுது அந்தக் கெட்டிக்கார சாமியார் சொன்னார்,

நான் ரெடி. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் இந்த மலையைத் தூக்கி என் தோள்களில் வையுங்கள். நான் அதைத் தூக்கி மாற்றி வேறு இடத்தில் வைத்து விடுகிறேன் என்றார்.

ஊர் மக்களுக்கோ ஒன்றுமே புரியவில்லை. எங்களுக்கு இந்த மலையைத் தூக்கி சாமி யார் தோளில் வைக்கும் அளவுக்கு ஆற்றல் இருந்தால், இந்தச் சாமியார் எதற்கு? நாங்களே தூக்கி வேறு இடத்தில் வைத்துவிட மாட்டோமா? இந்தச் சாமியார் நம்மை ஏமாற்றி விட்டாரே!

நாம் முட்டாள்களாகி விட்டோமே என்று வருத்தப்பட்டனர்-என்று தந்தை பெரியார் ஒரு கதையைக் கூறுவார்.

அந்தச் சாமியார் கூறிய உறுதிமொழிக் கும், ஜெயலலிதா அம்மையார் தேர்தல் அறிக் கையிலே குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளுக் கும் வித்தியாசம் இல்லை.

வாக்காளர்கள் ஏமாந்து விடக் கூடாது!

(சென்னை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில்
தமிழர் தலைவர் கி.வீர மணி
-25.3.2011

****************************

No comments: